FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 24, 2015, 11:49:26 AM
-
இறால் சூப்
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/11150527_1441764479454356_8541878844516050747_n.jpg?oh=f49e9f1bab6fa6a5339fc241a8e104fc&oe=55D10641&__gda__=1440003561_63fc747bd65bb5060ecff670a147bbc3)
தேவையான பொருட்கள்
இறால் - 1/4 கிலோ
தேங்காய் - 1/2 மூடி
முந்திரி - 5
பச்சை மிளகாய் – 4
மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி - 1 இன்ச்
தக்காளி ப்யூரி - 2 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
இறால் சூப் செய்முறை
இறாலைக் கழுவிக் கொள்ளவும். தேங்காயிலிருந்து பால் எடுத்துக் கொள்ளவும். இஞ்சியின் தோலை சீவி மிளகு, சீரகம், முந்திரியுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தக்காளி ப்யூரியில் சிறிது உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற விடவும். பச்சை மிளகாயை நீள வாக்கில் இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு ஊறிய இறாலையும் தக்காளி ப்யூரியையும் போட்டு வதக்கவும். வதங்கி இறால் சுருண்டதும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனோடு அரைத்த மசாலாவைச் சேர்த்து 4 கப் நீர் விட்டு கொதிக்க விடவும். இறால் வெந்ததும் இறக்கி அதில் தேங்காய் பால் ஊற்றி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.