FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 24, 2015, 11:36:55 AM
-
செட்டி நாட்டு ஆட்டுக்கறிக் குழம்பு
(https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/10014538_1441769902787147_853859308025991077_n.jpg?oh=bc0dc2faf351a978b8513b8ddd75fb7f&oe=55CF7371)
தேவையான பொருட்கள்
ஆட்டுக்கறி - அரை கிலோ
பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
நாட்டுத் தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் – 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
பட்டை – 1
வெந்தயம் - அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செட்டி நாட்டு ஆட்டுக்கறிக் குழம்பு செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் தாளித்து, சிறிய வெங்காயம், பூண்டு வதக்கி, கறியையும் சேர்த்து வதக்கி, தண்ணீர் வற்றி வரும் வரை வதக்கவும். (இப்படி வதக்கினால் கறி மிருதுவாகவும், மணமாகவும் இருக்கும்) இதில் தக்காளி, மிளகாய்த்தூள் போட்டு பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும். வதக்கிய பிறகு உப்பு, தண்ணீர் விட்டு நன்றாக வேக விடவும். கறி வெந்து குழம்பு தளதளவென்று வரும் பொழுது இறக்கி கருவேப்பிலை போட்டு மூடி விடவும்.
குறிப்பு:
செட்டிநாட்டில் மசாலா, காரம், எண்ணெய் அதிகம் சேர்க்கமாட்டார்கள். இந்தக் குழம்பு மிகவும் சுவையான இருக்கும். கறி வாங்கும் போது இளம் ரோல் நிறக் கறி தான் வாங்க வேண்டும். அது தான் சுவையாக இருக்கும். நன்றாக வேகும். நல்ல சிவப்பு நிறக்கறி வாங்கக் கூடாது. வேகவே வேகாது.