FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 23, 2015, 11:02:38 PM
-
காரைக்குடி மீன் குழம்பு
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/11108219_1442996082664529_485100749800372625_n.jpg?oh=20573cb8991a733dcb78a3c64066ab86&oe=55A37F71&__gda__=1441149511_1f187ad9aa28dd75fb262c62b30db587)
என்னென்ன தேவை?
மீன் – 1 /2 கிலோ
புளி – எலுமிச்சை அளவு
பூண்டு – 15 பல்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 1
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 1 /2 – 2 தேக்கரண்டி
மல்லித்தூள் – 3 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தேங்காய் துருவியது – 1 /4 கப்
மிளகு – 10 – 15
சீரகம் – 2 தேக்கரண்டி
தாளிக்க:
சீரகம் – 1 /2 தேக்கரண்டி
மிளகு – 1 /2 தேக்கரண்டி
வெந்தயம் – 10
நல்லெண்ணெய் – 1 /4 கப்
கருவேப்பிலை – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
புளியை 1 /2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். தேங்காய், மிளகு, சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நடுத்தர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மீனை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். கடாயில் என்னை ஊற்றி சீரகம், மிளகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் பூண்டு, வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கவும். பின் புளித்தண்ணீர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன், அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து குழம்பு திக்காகும் வரை கொதிக்க விடவும். வெட்டி வைத்துள்ள மீன் துண்டுகளைச் சேர்த்து 10 நிமிடங்கள் வேக விட்டு இறக்கவும்