FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on April 18, 2015, 07:39:48 PM

Title: காதல் தற்கொலை
Post by: thamilan on April 18, 2015, 07:39:48 PM
வாழ்க்கை வெறுத்தது
வாழ்ந்தது போதும்
தற்கொலை
செய்து கொள்ளலாம் என
மலை மேல் ஏறினேன்
பாய்வதா வேண்டாமா என
யோசித்து கொண்டிருந்த போது
ஒரு பெண் வந்து தடுத்தாள்
நானும் சாகத்தான் வந்தேன்
நாம் சாவதை விட
காதலிக்கலாம் என்று சொன்னாள்
மறுகணம்
யோசிக்காமல் மலையில் இருந்து
குதித்தேன்
காதலிப்பதும் தற்கொலையும் ஒன்று தானே
தற்கொலை
உடனே உயிரை கொன்று விடும்
காதல்
தினமும் என்னை கொல்லுமே


( இதை எழுதியது நான் இல்லை எனது ஆவி )