FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on April 17, 2015, 10:19:40 PM
-
அகலமான நாக்குக்காக கின்னஸில் இடம்பிடித்த தந்தை-மகள்
(https://scontent-nrt.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/11061975_1441335966163874_6971385292062466321_n.jpg?oh=bee17272639a658b69f1e747396b280e&oe=55E5E1CF)
அமெரிக்காவின் நியூ யார்க் நகரை சேர்ந்த தந்தையும் மகளும் உலகின் அகலமான நாக்குக்கு சொந்தக்காரர்களாக உலக சாதனைகளை பதிவு செய்யும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.
இங்குள்ள சைராகஸ் பகுதியில் வசிக்கும் பைரான் ஸ்க்லெங்கருடைய நாக்கின் அகலம் 8.6 சென்டி மீட்டராகும். தந்தைக்கு நான் ஒன்றும் சளைத்தவள் அல்ல என்பதை நிரூபிக்க பிறந்திருக்கும் இவரது 14 வயது மகள் எமிலியுடைய நாக்கின் அகலம் 7.3 சென்டி மீட்டர். அவ்வகையில், உலகிலேயே அதிக அகலம் கொண்ட நாக்குகளை உடைய ஆணாக பைரான் ஸ்க்லெங்கரும், பெண்ணாக இவரது மகள் எமிலியும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனர்.