FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 16, 2015, 10:08:38 PM

Title: ~ நண்டு மசாலா(செப்’ தாமு) ~
Post by: MysteRy on April 16, 2015, 10:08:38 PM
நண்டு மசாலா(செப்’ தாமு)

(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/11150449_1440557842908353_8457470997423512541_n.jpg?oh=906b4db89fe71254bd45edbcdcca584f&oe=55DCDA0B&__gda__=1437437884_ea7df95fbad10bc23c0f416fe48ffb9c)

தேவையான பொருட்கள்

நண்டு – 1/2 கிலோ
வெங்காயம் – 100 கிராம் (நறுக்கியது)
தக்காளி – 100 கிராம் (நறுக்கியது)
பச்சைமிளகாய் – 4 கீறியது
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
தேங்காய் – 1/2 மூடி
இஞ்சி – சிறுதுண்டு
பூண்டு – 4 பல்
சோம்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை

* நண்டை சுத்தம் செய்து கொள்ளவும். தேங்காய், இஞ்சி பூண்டு, வாணலியில் வறுத்து அரைக்கவும்.

* ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

* பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.

* தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் இவை சேர்த்து வதக்கவும்.

* அரைத்த தேங்காய் சேர்த்து நண்டையும் சேர்க்கவும். தண்ணீர் ஊற்றத்தேவையில்லை. போதுமான உப்பையும் சேர்க்கவும்.

* நண்டு, மசாலாவுடன் கலந்து வெந்து திக்காக வந்ததும் இறக்கி விடவும்.