FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 15, 2015, 11:07:46 PM
-
இறைச்சி வடை
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/11129636_1440540836243387_8076004192876630101_n.jpg?oh=4361fdbc3dca36cb14d270f9a5741e34&oe=55A43863&__gda__=1436077893_5a0f418cf8a78ae96d37fb5bcc214fa0)
தேவையான பொருட்கள்
கைமா (கொத்துக்கறி) – 1/4 கிலோ
உருளைக்கிழங்கு – 1/4 கிலோ
முட்டை – 2
கொத்தமல்லி – சிறிதளவு (நறுக்கியது)
டால்டா – 200 கிராம்
எலுமிச்சம் பழம் – 1/2 மூடி
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
வெங்காயம் – 2 நறுக்கியது
பட்டை – சிறிதளவு
கிராம்பு – 3
ரஸ்க் தூள் – 50 கிராம்
இஞ்சி – சிறுதுண்டு (பொடியாக நறுக்கியது)
பூண்டு பல் – 5 (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
* கைமாவைச் சுத்தம் செய்து, எலுமிச்சம் பழம் பிழிந்து, உப்பு, மஞ்சள்தூள் போட்டு வேக வைக்கவும். பின் நீரை வடித்து விட்டு வதக்கவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து மசிக்கவும். பட்டை, கிராம்பு இரண்டையும் தூள் செய்யவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி இலை, உருளைக்கிழங்கு, பட்டை, கிராம்பு பொடி இவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
* மட்டனுடன் இதை நன்கு மிக்ஸ் செய்யவும்.
* ஒரு பாத்திரத்தில் முட்டையை அடித்து ஊற்றி சிறிது உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.
* மட்டன் கலவையை இதில் முக்கி ரஸ்க் தூளில் புரட்டவும்.
* இதை வடைபோல் தட்டி, காய்ந்த எண்ணெயில் புரட்டி வேக வைத்து எடுக்கவும்.
இறைச்சி வடை ரெடி.