FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 11, 2015, 10:50:37 PM

Title: ~ சமைக்கும் முறை ~
Post by: MysteRy on April 11, 2015, 10:50:37 PM
சமைக்கும் முறை

(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/1898290_1438656686431802_8146763449651784046_n.jpg?oh=a37583a4cdf121b2147f78fb76fff250&oe=559E7092&__gda__=1437736475_8c540ab471bb8fc14c3c468cc6cb48a4)

எல்லா வகை எண்ணெய்களிலும் நல்லதும், கெட்டதும்
கலந்தே இருக்கும்

பூரிதக் கொழுப்பின் அளவைக் குறைக்க வேண்டும்.
புஃபா மற்றும் மூஃபா கொழுப்பு வகைகளைச் சரியான
முறையில் கலந்து பயன்படுத்த வேண்டும்.

சூடு அதிகம் தாங்கும் எண்ணெய்களான அரிசி தவிடு
எண்ணெய், கடலெண்ணெய், சூரிய காந்தி எண்ணெய்
போன்றவற்றை பொரிப்பதற்குப் பயன்படுத்தலாம்.

அதிகம் சூடு செய்தாலும் புகை வராமல் இருக்கும்
எண்ணெய்களையே பொரிக்கப் பயன்படுத்த வேண்டும்.

ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியத்துக்குச் சிறந்தது என
அதைப் பொரிக்கப் பயன்படுத்தக் கூடாது. அது அதிக
சூடு தாங்கும் திறன் குறைந்தது; விரைவில் புகைய
ஆரம்பித்து விடும்.

வறுப்பதற்கும், வதக்குவதற்கும் நல்லெண்ணெய், தேங்காய்
எண்ணெய்களைப் பயன்படுத்தலாம்.

தேங்காய் எண்ணெய் உறையும் வகையை சார்ந்தகாக
இருந்தாலும் மூஃபா அதிகம் உள்ளதால் உடலுக்கு நன்மை
செய்வதாக சமீப ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சமையலில்
தாளிப்பதற்கு ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
பயன்படுத்தலாம்.

அவியல், கூட்டு, பொரியல் இவற்றுக்கு தேங்காய் எண்ணெய்
பயன்படுத்தலாம். குழம்பு வகைகளுக்கு நல்லெண்ணெய்
பயன்படுத்தலாம்.

சாப்பிடும்போது சூடான சாதத்தில் ஒரு சிறிய தேக்கரண்டி
நெய் பயன்படுத்தலாம். இந்திய மருத்துவ நூல்கள் நெய் சீரணிக்க
உதவுதாக சொல்லப்பட்டிருக்கிறது. மூளை வளர்ச்சிக்கு
உதவுவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆக இப்படி எண்ணெய்களைக் கலந்து பயன்படுத்தும்
பொழுது கொலஸ்டிராவில் எல்.டி.எல். குறையும்,
ஹச்.டி.எல்., குறையாது. டிரைகிளிசைடும் அதிகமாகாது.

ஒரு நாளைக்கு 1500 கிலோ கலோரி உட்கொண்டால் அதில்
450 கிலோ கலோரி கொழுப்புச்சத்து இருக்க வேண்டும்.
அதாவது ஒரு நாளைக்கு நாம் உட்கொள்ள வேண்டிய
கொழுப்பின் அளவு 50 கிராம் மட்டுமே!