FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 08, 2015, 07:42:22 PM

Title: ~ அஷ்டாம்சக் கஞ்சி மருத்துவ உணவுகள் ~
Post by: MysteRy on April 08, 2015, 07:42:22 PM
அஷ்டாம்சக் கஞ்சி மருத்துவ உணவுகள்   

(https://scontent-kul.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/10433106_1436500843314053_4165019672354815398_n.jpg?oh=bc2f52bf11b664f8c1000fb31bb181a0&oe=55A67B5B)

தேவையானவை:

கோதுமை, கழுவிக் காயவைத்த கேழ்வரகு, பொட்டுக் கடலை, பார்லி அரிசி, ஜவ்வரிசி, பாசிப்பயறு - முறையே அரை ஆழாக்கு, கசகசா - கால் ஆழாக்கு, ஓமம் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

 எல்லாவற்றையும், வெறும் கடாயில் தனித்தனியே வறுத்து, ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துச் சலித்துவைத்துக் கொள்ளவும்.
இந்தப் பொடியில் ஒரு ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து, கொதிக்கவைத்துப் பால் சேர்த்துக் குடித்தால், தெம்பு கிடைக்கும். சோர்வே இருக்காது.
மருத்துவப் பலன்கள்: வயிற்றுப்போக்கு ஏற்பட்ட பிறகு, சாப்பிடக் கூடிய மித உணவு. ஓமம் இருப்பதால், செரிமானத்துக்கு உதவும்.