சிறுதானிய கேக்!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval_kitchen%2F2015%2F04%2Fodunjh%2Fimages%2Fp25.jpg&hash=b525b596dc22e94e69b995aa19e94c5f99cae8f3)
கடையில் கிடைக்கும் கேக்குகளை விட சத்துக்கள் நிரம்பிய சிறுதானியத்தில் நமக்காக கேக்குகளைச் செய்து காட்டியிருக்கிறார் சென்னையச் சேர்ந்த சிறுதானிய சமையல் கலைஞர் கமலம்...
கேக் க்ரீம் தயாரிக்க
50 கிராம் ஃப்ரெஷ் க்ரீம் (டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) பவுடருக்கு 50 மில்லி ஐஸ் தண்ணீர் சேர்த்து, இருபது நிமிடங்களுக்கு அடித்து கெட்டியானவுடன் ஃபிரிட்ஜில் 6 மணி நேரத்துக்கு வைத்து தேவையானபோது எடுத்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இந்த கேக் க்ரீம் தயாரிக்க முடியாதவர்கள் கடைகளில் ரெடிமேடாக விற்கும் வைப்பிங் (whiping) க்ரீமை வாங்கி வைத்துக்கொண்டு தேவைப்படும்போது எடுத்து (50 கிராம்) இருபது நிமிடங்களுக்கு அடித்துக் கெட்டியாக்கி கேக்கின் மீது தடவி விடவும்.
குறிப்பு: கேக் செய்வதற்கு தேவையான ஸ்பூன், கப்புகள் எல்லாம் சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும். அதை வாங்கி வைத்து கொண்டால் தண்ணீர், பால், என எல்லாவற்றையும் அளந்து எடுப்பது எளிது.