FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on April 04, 2015, 10:15:47 PM

Title: ~ போர் அடிக்கும் போது கொறிக்க விரும்பும் உணவுகள் ~
Post by: MysteRy on April 04, 2015, 10:15:47 PM
போர் அடிக்கும் போது கொறிக்க விரும்பும் உணவுகள்

(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/11017223_1436075043356633_3930967245139275933_n.jpg?oh=f169e4ec937f96230ffb35044e916e74&oe=55B8E760&__gda__=1436746591_d55ebb30067cabb04d842fe18585306b)

பசி வயிற்றை கிள்ளும் சமயத்தில் உணவை செய்து சாப்பிடும் அளவுக்கு நிறைய பேருக்கு பொறுமை இருக்காது. அதற்காக எப்போதும் ஓட்டலில் ஆர்டர் செய்து வரவழைத்து சாப்பிடுவது என்பதும் சாத்தியமாகாது. எனவே, பசிக்கும் போது உடனே சமைக்கக்கூடிய உணவு வகைகளை தயாரிப்பது நமது நேரத்தையும் டென்ஷனையும் குறைக்கும்.

நமது கையால் செய்து சாப்பிடும்போது கிடைக்கும் சந்தோஷத்திற்கும் திருப்திக்கும் அளவே இருக்காது. சிலருக்கு போர் அடிக்கும் போது ஏதாவது சாப்பிட தோன்றும். அவர்களுக்காக அவசர உணவுகள் சிலவற்றை பார்க்கலாம்.

• மேகி : பசங்க மட்டுமில்ல இப்பொழுது பெரியவங்களும் மேகி சாப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. தினமும் இட்லி, தோசைன்னு சாப்பிட்டு போரடிச்சவங்களுக்கு இதை செய்து கொடுக்கலாம். நேரமும் மிச்சமாகும். 5 நிமிடத்தில் செய்யக்கூடியது. மிகவும் சுவையானதும் கூட. இப்போதுள்ள இளவட்டங்கள் இந்த வகை உணவுகளையே அதிகம் விரும்புகின்றனர்.

• வறுத்த சிக்கன் : ரெடிமேட் சிக்கன் பேஸ்ட் கடைகளில் கிடைக்கும். அதை சிக்கனில் போட்டு பிரட்டி 10 நிமிடம் ஊற வைத்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான, எளிமையான வறுத்த சிக்கன் ரெடி. ரொம்ப பசி. ஆனா உடனே செஞ்சு சாப்பிடணும்னு ஆசைப்படுபவர்களுக்காகவே இது. இந்த வறுத்த சிக்கனுடன் சூடான காபி அல்லது டீ குடித்தால் அமிர்தமா இருக்கும்.

• சாக்லெட் : சாக்லெட்டை விரும்பாதவர்களே கிடையாது. உடல் பெருத்து விடும் என்ற பயத்திலேயே பல இளம் பெண்கள் ஆசை இருந்தாலும் சாக்லெட் சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். போர் அடிக்கும் போது ஏதாவது சாப்பிட தோன்றும். அப்போது பிரிட்ஜில் இருக்கும் சாக்லெட்டை எடுத்து சாப்பிட்டு பாருங்க. அப்ப எந்த டயட்டும் ஞாபகத்திற்கு வராது. இன்னும் சாப்பிட்டுகிட்டே இருக்கணும்னு தோன்றும்.

• பானி பூரி : அனைத்து இடங்களிலும் இப்போது பானிபூரி கிடைக்கிறது. அதன் சுவைக்கு பெரியோர் முதல் குழந்தைகள் வரை அடிமை என்றே கூறலாம். மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் ஆக செய்தும் சாப்பிடலாம். கடைகளில் விற்கும் பானிபூரியை வாங்கி வந்து, வீட்டிலேயே சாட் ஐட்டத்தை செய்து சாப்பிடலாம்.