FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 04, 2015, 09:39:56 PM
-
கத்திரிக்காய் தக்காளி சப்ஜி
(https://scontent-kul.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/11133829_1436142510016553_22718826288581306_n.jpg?oh=6530ae7d75247bdd95656200da9a7bcf&oe=55BA5E5F)
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் - 4 (நறுக்கியது) வெங்காயம் - 1 (நறுக்கியது) எண்ணெய் - 1/4 டீஸ்பூன் பூண்டு - 4-5 பற்கள் தக்காளி - 4 (நறுக்கியது) தண்ணீர் - 1 கப் மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு பிரியாணி இலை - 1 பட்டை - 1 மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் சீரகப் பொடி - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது
செய்முறை :
முதலில் கத்திரிக்காயை வெட்டி, நீரில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பூண்டு சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும். பின்பு அதில் தக்காளி, கத்திரிக்காய், தண்ணீர், மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், சீரகப் பொடி, கரம் மசாலா சேர்த்து கிளறி, மூடி வைத்து 8-10 நிமிடம் நன்கு மென்மையாக வேக வைக்க வேண்டும். இறுதியில் மூடியைத் திறந்து, நன்கு சப்ஜி போன்று மென்மையாகும் வரை சிறிது நேரம் வதக்கி இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறினால், கத்திரிக்காய் தக்காளி சப்ஜி ரெடி!!!