FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 03, 2015, 09:03:06 PM
-
வெள்ளரிப் பச்சடி!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Fdoctor%2F2015%2F04%2Fmtknjg%2Fimages%2Fp37a.jpg&hash=07644b5298a2a8c91d6135cae046e05c003d49f1)
ஒரு பெரிய வெள்ளரிக்காயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு கேரட், இரண்டு மாங்காய்த் துண்டுகளைத் துருவிக் கொள்ளவும். ஒரு இஞ்சி, ஒரு பச்சை மிளகாயை அரைத்து, நறுக்கிய வெள்ளரித் துண்டு, துருவிய மாங்காய், கேரட்டுடன் சேர்த்துக் கலக்கவும். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாயை மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். உப்பு, புளிக்காத தயிர் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். சிறிது எண்ணெயில் கடுகைத் தாளித்துக் கொட்டவும். வெள்ளரியைத் துருவியும் சேர்க்கலாம். சப்பாத்தியுடன் சாப்பிடலாம். தனியாகவும் எடுத்துக்கொள்ளலாம்.