FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 02, 2015, 09:09:02 PM
-
கார சட்னி
(https://scontent-kul.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/11064681_1435723403391797_212059256888841737_n.jpg?oh=f9920125435a260647fa75a7f39a6de8&oe=559DB547)
தேவையான பொருட்கள்:
தக்காளி - 2 ( நறுக்கியது )
பெரிய வெங்காயம் - 3 ( நறுக்கியது )
வர மிளகாய் - 2 -3
புளி - கோலிகுண்டு அளவு
கடுகு , உளுந்து - 1/2 ஸ்பூன்
எண்ணெய் -2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் மிக்ஸ்சியில் தக்காளி, வர மிளகாய், வெங்காயம், புளி உப்பு தேவையான அளவு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அடுத்து தளிக்கும் கரண்டியில் எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு , உளுந்து கறிவேப்பிலை சேர்த்து தளித்து சட்னியில் சேர்த்து கலக்கவும் .
கார சட்னி ரெடி இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும் .