FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 01, 2015, 09:08:15 PM

Title: ~ லசான்யா ~
Post by: MysteRy on April 01, 2015, 09:08:15 PM
லசான்யா

(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/11037764_1435432606754210_8768904059663377396_n.jpg?oh=1f05d21524c0e93112e24a77a2d31820&oe=55A107B0&__gda__=1437679247_8327803ef7c227bb3cb42a0dcdfe4e35)

லசான்யா ஷீட்ஸ் - (நோ ஃபாயில்) 6,
பாஸ்தா சாஸ் - 1 1/2 கப்,
மொசரெல்லா சீஸ் - 1 1/2 கப் (துருவியது),
பனீர் அல்லது காட்டேஜ் சீஸ் - 1/2 கப் (துருவியது),
க்ரீம் சீஸ் - 1/4 கப்,
கீரை (பொடியாக நறுக்கியது) - 2 கப்,
பொடியாக நறுக்கப்பட்ட பூண்டு - 3 பல்,
கருப்பு மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்,
பழுத்த சிவப்பு மிளகாய் (விரும்பினால்) - 1,
உப்பு - தேவையான அளவு,
ஆலிவ் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

1. ஒரு கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து நிறம் மாறாமல், குறைந்த தீயில் ஒரு நிமிடம் வதக்கவும்.
2. இதில், பொடியாக நறுக்கிய கீரை, உப்பு, மிளகுத் தூள், சிவப்பு மிளகாய் சேர்த்து, கீரை சுருங்கும் வரை வதக்கவும்.
3. அடுப்பை அணைத்து, கீரையை ஆறவைக்கவும். அவனை (ளிஸ்மீஸீ) 190 டிகிரி செல்சியஸ் அளவுக்கு ப்ரீ ஹீட் செய்யவும்.
4. ஆறிய கீரை, துருவிய சீஸ், க்ரீம் சீஸ், பனீர் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும்.
5. நன்றாகக் கலக்கவும். ஒரு அவன் ப்ரூஃப் ட்ரேயில் (10*6), 2 டேபிள்ஸ்பூன் அளவுக்கு பாஸ்தா சாஸை பரப்பவும்.
6. லசான்யா ஷீட்டை வரிசையாக வைக்கவும். ஒன்றின் மேல் ஒன்று வைக்கக் கூடாது.
7. இதன் மேல், மேலும் 2 டேபிள்ஸ்பூன் பாஸ்தா சாஸை பரப்பவும்.
8. இதன் மேல் கீரைக் கலவையை 4 டேபிள்ஸ்பூன் அளவுக்குப் பரப்பவும்.
9. மறுபடியும் இதே போல லசான்யா ஷீட், சாஸ், கீரைக் கலவை ஆகியவற்றைப் பரப்பவும்.
10. கடைசியாக பாஸ்தா சாஸை பரப்பி, மீதமுள்ள மொசரெல்லா சீஸை பரப்பி முடிக்கவும்.
11. இதை, அவனில் அலுமினியம் ஃபாயில் கொண்டு ட்ரேயின் வாயை மூடி, 40 அல்லது 45 நிமிடங்கள், 190 டிகிரி செல்சியஸில் பேக் செய்யவும்.
பரிமாறும் முன் 15 நிமிடங்கள் ஆற வைக்கவும். பிறகு, பீட்சா கட்டர் கொண்டு, சதுரங்களாக வெட்டிப் பரிமாறவும்.

உங்கள் கவனத்துக்கு...

அலுமினியம் ஃபாயில் கொண்டு மூடாவிடில், சீஸ் கருகி விடும். தேவைக்கேற்ப குறைத்தோ, அதிகமாகவோ சேர்க்கலாம்.