FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 29, 2015, 09:13:48 PM
-
வடை
(https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/1604440_1432346033729534_6795913876929659126_n.jpg?oh=bf4a76f6baa7bf677a659ccfe93107ae&oe=55B1B2DE)
தேவையான பொருள்கள்
வேகவைத்த உருளைக்கிழங்கு-2
கேரட் துருவல் -2 டீஸ்பூன்
முட்டைகோஸ் துருவல்-2 டீஸ்பூன்
நறுக்கிய குடைமிளகாய்- 2 டீஸ்பூன்
மைதா மாவு-தலா 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்-கால் டீஸ்பூன்
இஞ்சி,பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த விழுது-1டீஸ்பூன்
உப்பு எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கின் தோலை நீக்கி மசித்துக் கொள்ளவும். இதனுடன் கேரட் துருவல், முட்டைக்கோஸ் துருவல், நறுக்கிய குடைமிளகாய், இஞ்சி பச்சை மிளகாய் விழுது, மிளகாய்த்தூள் மைதாமாவு, உப்பு போட்டு கலந்து பிசையவும்.
இந்த கலவையை பெரிய எலுமிச்சை அளவு உருட்டி வடையாக தட்டவும் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்துள்ள வடைகளைப் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.
ஏதேனும் ஒரு சட்னி அல்லது சாஸீடன் பரிமாறவும்.