FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 27, 2015, 02:14:52 PM
-
தினை - பனீர் சப்ஜி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F04%2Fywvlnj%2Fimages%2Fp51.jpg&hash=baddc27be5d80336d38f5b983d41d8f16fb302ab)
தேவையானவை:
தினை - கால் கப், பொடியாக `கட்’ செய்த பனீர் துண்டுகள் - 200 கிராம், பட்டை - ஒரு துண்டு, கிராம்பு - ஒன்று, ஏலக்காய் - 2, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்) தக்காளி - 2, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெறும் வாணலியில் தினையைப் போட்டு வறுக்கவும். அதனுடன் இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி, குக்கரில் வைத்து, மூன்று விசில் வரும் வரை வேகவிடவும். பிறகு, வெளியே எடுத்து மசித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு... பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்துக் கிளறி, நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்துக் கிளறவும். பிறகு, இஞ்சி - பூண்டு விழுது, மல்லித்தூள், மிளகாய்த்தூள், நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். வேகவைத்த தினையை இதனுடன் சேர்த்துக் கிளறி, பனீர் துண்டுகளையும் சேர்த்துக் கிளறி மேலும் கொதிக்கவிடவும். கடைசியாக, கறிவேப்பிலையை கிள்ளிப்போட்டு, ஒரு கொதிவிட்டு இறக்கவும். இதை சப்பாத்தியுடன் பரிமாறலாம்.