FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: ஸ்ருதி on December 20, 2011, 07:49:42 PM
-
கல்வி அறிவு இல்லாதவரை கண்ணிழந்தோர் என வள்ளுவர் குறிப்பிடுவதில் இருந்தே
கண்களின் அருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். உலகின் உள்ள அத்தனை
அழகையும் நாம் பார்க்க உதவி புரிவது கண்களே. அந்த கண்களை காக்க நாம் அக்கறை
எடுத்துக்கொள்வதில்லை. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதை விட
ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளவைகளை பின்பற்றினால் கண்களை பாதுகாக்கலாம்.
கண்களைக் காக்கும் வைட்டமின் ஏ
கண்களுக்கு அத்தியாவசிய தேவை விட்டமின் ‘ஏ’. இதனால் கண்கள் பலத்தையும்,
நல்ல பார்வையையும் பெறும். விட்டமின் ‘ஏ’ எல்லாவித ஆரஞ்ச் / மஞ்சள் நிற
காய்கறிகளிலும், பழங்களிலும் கிடைக்கிறது. முக்கியமாக கேரட், ஆரஞ்ச்,
பரங்கிக்காய், மாம்பழம், பப்பாளி இவற்றில் விட்டமின் ‘ஏ’ உள்ளது.
பசலைக்கீரை, கொத்தமல்லி கீரைகளிலும் உள்ளது. மாமிச உணவில் மீன், லிவர், முட்டைகள் இவற்றில் விட்டமின் ‘ஏ’ கிடைக்கிறது.
விட்டமின் ‘ஏ’ வுடன் கூடவே விட்டமின் ‘சி’ யையும் சேர்த்துக் கொள்ள
வேண்டும். விட்டமின் ‘சி’ கண்களில் கண்புரை வராமல் தடுக்கும்.
நெல்லிக்காய், கொய்யாப்பழம், ஆரஞ்ச், எலுமிச்சம்பழம், முட்டைக்கோஸ்,
குடமிளகாய் மற்றும் தக்காளியில் விட்டமின் ‘சி’ உள்ளது. இவற்றை உணவில்
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
திரிதோஷ கோளாறுகள்
கண் கோளாறுகள் உண்டாகும் காரணம் திரிதோஷ கோளாறுகள். வாததோஷத்தினால்
கண்களைச் சுற்றி கருமை தோன்றும். ‘வறட்சி’ யினால் உலர்ந்து போகும்.
பித்ததோஷம் கண்கள் சிவந்து போதல், எரிச்சல் இவற்றை உண்டாக்கும். கபத்தால்
கண்கள் அரிப்பு, நீர்வடிதல் போன்றவற்றை உண்டாக்கும்.
பழங்கள் காய்கறிகள்
தினசரி உணவில், பயத்தம் பருப்பு, முக்கிரட்டை கீரை, பசலைக்கீரை,
முருங்கைக்கீரை, கேரட், ஆப்பிள், மாதுளை, பப்பாளி, பாகற்காய், புடலங்காய்
முதலியவற்றை சேர்த்துக் கொள்வது கண்களுக்கு நல்லது என்கிறது ஆயுர்வேதம்.
இது தவிர அரிசி, கோதுமை, பார்லி, பச்சைப் பயறு, கடலைப் பருப்பு, உளுந்து,
சோளம் போன்ற உணவுகள் கண்ணுக்கு நன்மை தருபவை. வெந்தயம், வெந்தயக் கீரை,
முருங்கைக்காய், முருங்கைக்கீரை, முட்டைக்கோஸ், பசலைக்கீரை, கொத்தமல்லி,
கறிவேப்பிலை, புதினா, ஜீரகம், கருமிளகு, லவங்கம், கேரட், உருளைக்கிழங்கு,
வெங்காயம், பூண்டு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முள்ளங்கி, பீட்ரூட் போன்ற
காய்கறிகளையும் தவறாது உட்கொள்ள வேண்டும்.
பேரீட்சைப்பழம், அத்திப்பழம், மாதுளம்பழம், திராட்சை, இயற்கையாக பழுத்த
மாம்பழம், ஆப்பிள், நெல்லிக்கனி, வாழைப்பழம், ஆரஞ்ச், கொய்யா, தக்காளி,
கருப்பு திராட்சை, எலுமிச்சம்பழம், பப்பாளி, அன்னாசி, பலாப்பழம் முதலியவை
கண்களுக்கு ஏற்றது.
எள் எண்ணெய், மீன் எண்ணெய், நதி மீன்கள், கோழி, சுறா மீன், ஆட்டின் ஈரல், முட்டை,
பசும் பால், ஆட்டுப்பால், பசும்பாலிலிருந்து எடுக்கப்பட்ட நெய்,
ஆட்டுப்பாலின் நெய், பசும்பாலிலிருந்து செய்யப்பட்ட வெண்ணெய், மோர்,
கிரீம் போன்ற உணவுகளை உட்கொள்ளலாம்.
மூலிகை கஷாயங்களால் அடிக்கடி கண்களை கழுவுதல், பிரம்மி, நெல்லி,
பிருங்கராஜ் மூலிகைகளின் தைலத்தை தலைக்கு தேய்த்து குளிப்பது கண்களுக்கு
பாதுகாப்பானது என்கிறது ஆயுர்வேதம்.
எதை தவிர்க்க வேண்டும்
காராமணி, ராஜ்மா, சோயாபீன், முலாம்பழம், தர்பூசணி
செந்தூரகம் எண்ணெய், லின்சிட் ஆயில், பிரெட், பன் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும் என்கிறது ஆயுர்வேதம்
-
Nala payanulla thagaval shur
kankal rompa mukiyamaana urupu athai paathukaakka iyarkaiyaana unavukal iruku
ilana pinadi kannadi podanum athu rompa kastam
-
நல்ல பதிவு சுருதி கண்கள்தான் பிரதானம் ... அதற்க்கு கவனம் முக்கியம் சத்தான உணவுகளும் அவசியம் ...