FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on December 19, 2011, 05:28:43 PM

Title: தமிழே! தமிழா!
Post by: Yousuf on December 19, 2011, 05:28:43 PM
தமிழே தமிழே உனை நானும் மறவேனா
தமிழே தமிழே உனைநானும் பிரிவேனா

தமிழே தமிழே தாலாட்டும்கேட்டேனே
தமிழே தமிழே தாய்மடியும் நீதானே

தமிழே தமிழே உன்எழுத்து பூச்சரம்
தமிழே தமிழே உன் வார்த்தை பூபாளம்
தமிழே தமிழே உன்பேச்சு தேன்கொஞ்சும்

தமிழே தமிழே தமிழர்கள் தம்மண்ணில்
தமிழே தமிழே தமிழர்கள் படும்பாடு
தமிழே தமிழே நீபார்த்தாலும் சகிக்காது

தமிழே தமிழே தமிழர்கள் உன்மக்கள்
தமிழே தமிழே உன்பிள்ளை கண்களிலே
தமிழே தமிழே கண்ணீரும் வரலாமோ

தமிழா தமிழா தமிழ்மைந்தர்களின் ஈனத்தை
தமிழா தமிழா துப்புரவாய் துடைத்திடவே

தமிழா தமிழா தூயவனாம் இறைவனிடம்
தமிழா தமிழா துணிவைத்தரசொல்லி வேண்டிடுவோம்

தமிழே தமிழே எனதருமை தாய்த்தமிழே
தமிழ்மொழிதான் எனக்கென்றும் தாய்மொழியே......


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
Title: Re: தமிழே! தமிழா!
Post by: RemO on December 23, 2011, 05:11:36 PM
நல்ல கவிதை யூசுப்
Title: Re: தமிழே! தமிழா!
Post by: Yousuf on December 23, 2011, 10:38:26 PM
நன்றி ரெமோ மாம்ஸ்!