FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on February 25, 2015, 11:26:24 PM
-
ஒரு கன்னத்தில் அடித்தால்
மறு கன்னத்தையும் காட்டு
என்றார் யேசுபிரான்
நீ அடித்தது என் இதயத்தில்
இன்னொரு இதயத்துக்கு
எங்கு போவேன் நான்
வில்வித்தையில் நீ
கைதேர்ந்தவள் தான்
குறி தவறாமல் எய்கிறாய்
சொல்அம்புகளை என் இதயத்தை நோக்கி
வாளை விட கொடியது நா
அந்த நாவாலே
இதயத்தை குத்தி கிழித்து விட்டு
அதே நாவாலே
மருந்தும் தடவ முயல்கிறாய்
இது உன்னால் மட்டுமே முடியும்
உறவுகளின் உன்னதம் தெரியாதவளே
ஒவ்வொரு உறவுக்கும்
ஒவ்வொரு உன்னத சக்தி உண்டு
நண்பர்கள் காதலர்களாக மாறலாம்
காதலர்கள் நண்பர்களாக மாற முடியாது
அந்த உறவிலும் புனிதம் இல்லை
அந்த நட்பிலும் உண்மை இல்லை