FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on February 20, 2015, 01:21:11 PM
-
விசித்திர உலகம்
தின்ன உணவில்லாமல்
திண்டாடும் கூட்டம் ஒருபுறம்
தின்ன முடியாமல்
திண்டாடும் கூட்டம் மறுபுறம்
சிந்திய வியர்வைக்கு
சில்லறை கூட சேராத
கூட்டம் ஒருபுறம்
செயற்கை குளிர் அறையில்
கும்மாளம் அடிக்கும்
பண முதலைகள் மறுபுறம்
உண்பதற்கு தட்டுப்பாடு ஒருபுறம்
கொழுப்புக் கூடி
உண்பதற்கு கட்டுப்பாடு மறுபுறம்
பட்டாடை ஒருபுறம்
கைபட்டவுடன் கிழியும் ஆடை மறுபுறம்
விந்தையான உலகம் தான் இது
ஏ.......
காலதேவனே
எதில் வேற்றுமை இருந்தாலும்
எல்லோரையும் அடக்கி அடக்கமாக
உன்னில் உள்வாக்குவதில் மட்டும் நீ
என்று சமமாகவே இருக்கிறாய்
-
உண்மைதான் நண்பரே... இயற்கையின் இயக்கவியல் ரகசியத்தை தெரிந்து கொள்ள முயற்சித்தால், ஓர் ஆச்சரியம்தான் !....