(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-0Kfu-PT6RKw%2FVOPCMwlopmI%2FAAAAAAAAPCI%2FGR8IvPeYIeo%2Fs1600%2F111.jpg&hash=94b1bb40d65b19d649fcb21ed9f6e2f8700d175c)
மின் கட்டணம் செலுத்தும் கடைசி தேதியை மறந்து விட்டு இனி ‘பைனோடு‘ கட்டணத்தை செலுத்த தேவையில்லை. நுகர்வோர்களுக்கு நினைவுப்படுத்த மின்வாரியம் மெசேஜ் கொடுத்துவிடும்.
பெரும்பாலானவர்கள் மின் கட்டணம் செலுத்தும் கடைசி தேதியை மறந்து விடுவார்கள். இதனால், மின் வாரிய ஊழியர்கள் மின் கட்டணம் செலுத்தாத வீடுகள் மற்றும் வணிக ரீதியான கட்டிடங்களுக்கு சென்று பியூஸ் கேரியரை பிடிங்கிய பின்னரே கட்டணம் செலுத்த வேண்டியது தெரிய வரும். பின், அபராதத்துடன் சென்று கட்டணத்தை செலுத்தி மின் இணைப்பை பெறுவது வழக்கம். இதனால், ஓரிரு நாட்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அவதிப்படுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சில இடங்களில் பிரச்னைகளும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், மின் கட்டணம் செலுத்தும் கடைசி தேதி குறித்து நமக்கு ‘அலர்ட்‘ மெசேஜ் அனுப்பும் புதிய வசதியை மாவட்ட மின் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக தற்போது அனைத்து மின் நுகர்வோர்களிடம், செல்போன் எண்களை சேகரிக்கும் பணிகளை துவக்கியுள்ளது. செல்போனில், மெசேஜ் கொடுப்பதன் மூலம் இனி அபராதத்துடன் மின் கட்டணம் செலுத்துவது குறைவது மட்டுமின்றி, பிரச்னைகளும் குறைய வாய்ப்புள்ளது. நுகர்வோர், மின் கட்டணம் செலுத்தும் அலுவலகங்களுக்கு சென்று தங்களது செல்போன் எண்ணை கொடுக்கலாம்.
இதற்காக மின் அலுவலுகத்தில் தனியாக பதிவேடு வைக்கப்பட்டு, நுகர்வோர் தாங்களாகவே மொபைல் போன் எண்ணை பதிவு செய்யயல்லம் .
அல்லது இணையதளத்தில் பகிர்மானக் கழக இணையதளமான , http://www.tangedco.gov.in/index1.php?tempno=- (http://www.tangedco.gov.in/index1.php?tempno=-)ல்பில்லிங் சர்வீசஸ் (Billing Services) என்ற ஆப்ஷனில் சென்றால், இறுதி ஆப்ஷனாக மொபைல் நம்பர் ரெஜிஸ்ட்ரேஷன் (Mobile Number Registration) சேர்க்கப்பட்டுள்ளது. அதில் க்ளிக் செய்தால், தங்களது மின் மண்டல எண்ணை தனியாகவும், மற்ற எண்களை தனியாகவும் குறிப்பிட வழி செய்யப்பட்டுள்ளது. இணைப்பு எண்ணைப் பதிவு செய்ததும், மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.