FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 13, 2015, 11:51:05 AM
-
சாமை கறிவேப்பிலை சாதம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fdoctor%2F2015%2F02%2Fzmziyt%2Fimages%2Fp58.jpg&hash=a706fde54498502a8bd1a80aa0516d1181644010)
தேவையானவை:
சாமை அரிசி - ஒரு கப், கறிவேப்பிலைப் பொடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன், நிலக்கடலை - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு.
கறிவேப்பிலைப் பொடி செய்வதற்கு:
கறிவேப்பிலை - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 3, கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், உளுந்து - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கு ஏற்ப.
செய்முறை:
பொடி செய்யவேண்டியதை, வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்து ஆறவிட்டு, பொடி செய்துகொள்ளவும். சாமை அரிசியைக் கழுவி, நீரை வடியவிட்டு, 10 நிமிடங்கள் ஊறவிடவும். அடுப்பில் குக்கரை வைத்து, ஒரு பங்கு அரிசிக்கு, இரண்டரை பங்கு நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். அதில், ஒரு தேக்கரண்டி நெய் அல்லது நல்லெண்ணெய், உப்பு சேர்க்கவும். கொதித்துவருகையில், ஊறவைத்த சாமை அரிசியை சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி, தீயை சிம்மில் வைத்து, 10 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிடவும். பிரஷர் அடங்கியதும், குக்கரைத் திறந்து சாதத்தை எடுத்து, ஹாட்பாக்ஸில் போட்டு மூடிவைத்தால், சாதம் உதிரியாக இருக்கும்.
வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைத் தாளிக்கவும். இதனுடன் கறிவேப்பிலைப் பொடி, வடித்த சாதம் இரண்டையும் சேர்த்துக் கிளறவும். தேவைப்பட்டால், உப்பு சேர்த்துக் கொள்ளவும். குறைந்த தீயில் வைத்து, மெதுவாகக் கிளறி, நன்கு கலந்துவந்ததும் இறக்கி, அப்பளம் அல்லது துவையலுடன் பரிமாறவும்.