FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 13, 2015, 11:47:28 AM
-
தினை கட்லெட்
தேவையானவை:
வேகவைத்த உருளைக்கிழங்கு - 2, வேகவைத்த தினை அரிசி - ஒரு கப், இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், வேகவைத்த பச்சைப் பட்டாணி - கால் கப், துருவிய கேரட் - கால் கப், உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு.
செய்முறை:
வேகவைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்துக்கொள்ளவும். அதனுடன், வேகவைத்த தினை அரிசி, இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் விழுது, வேகவைத்த பச்சைப்பட்டாணி, துருவிய கேரட், உப்பு, கொத்தமல்லி, புதினா சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். பிசைந்த மாவை, விருப்பமான வடிவில் தட்டி (தட்டையாகவோ, நீளமாக உருட்டியோ) சூடான தவாவில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் சிவக்கவிட்டு எடுத்தால், கட்லெட் தயார்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fdoctor%2F2015%2F02%2Fzmziyt%2Fimages%2Fp56c.jpg&hash=0ef91544c58ca1c8f371189dbce59b47f9ad2328)
குதிரைவாலி தக்காளி தோசை
தேவையானவை:
குதிரைவாலி அரிசி - 4 கப், உளுந்து - ஒரு கப், வெந்தயம் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கு ஏற்ப, தக்காளி - 2, இஞ்சி - சிறிய துண்டு, நறுக்கிய வெங்காயம் - ஒன்று, சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவைக்கு ஏற்ப.
செய்முறை:
குதிரைவாலி அரிசி, உளுந்து, வெந்தயத்தை மூன்று மணி நேரம் ஊறவிட்டு அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து, நான்கு மணி நேரம் புளிக்கவிடவும். தக்காளி, சீரகம், இஞ்சி சேர்த்து, விழுதாக அரைத்து, மாவுடன் கலக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். சூடான தோசைக் கல்லில், மெல்லிய தோசைகளாகச் சுட்டு, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.