(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1117.photobucket.com%2Falbums%2Fk600%2FMadrasMARAN%2FPoems%2FThedal%25201_zpsje0xsk5r.png&hash=9485c0cc0972d5ec0f1ef088b9094411e803d1f3)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1117.photobucket.com%2Falbums%2Fk600%2FMadrasMARAN%2FPoems%2FThedal%25202_zps7ormylhs.png&hash=feabee12176cec6fd85bf13cfdab04894bbb5917)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1117.photobucket.com%2Falbums%2Fk600%2FMadrasMARAN%2FPoems%2FMaran_zpsk5vqazan.png&hash=95ed15798fa8db05d59de9136bb9ca3df1e03667)
காதல் இரு மனங்களின் சங்கமம்
காதல் உன்னதமானது
காதல் புனிதமானது
கேட்டு கேட்டு புளித்த போன
பசப்பும் வார்த்தை ஜாலங்கள்
காதலில் எங்கே உள்ளது புனிதம்
எங்கே உள்ளது உன்னதம் ..!
தவறான எதிர்பார்ப்பு இல்லாத
இடத்தில்வளரும் அந்த
காதல் உன்னதமானது தான் ..!
என் மீது நம்பிக்கை இல்லையா ?
இது சத்தியம் என்று பசப்பும்
வார்த்தைகள் இல்லாத இடத்தில்
வளரும் காதல் உன்னதமானது தான் ..!
கண்ணை இருக்க மூடிக்கொண்டு
பூலோகம் இருட்டு என்று கருதும்
குருட்டு பூனை போல
தன்னை சுற்றி இருபவரை
சட்டை செய்யாமல் சல்லாபம் செய்வதை
காதல் என்று சொல்லாதவரை
காதல் புனிதமானது தான் ..!
பெண்மையை மதித்து அவளது
உணர்வுகளுக்கு மதிபளிக்கும்
இடத்தில் வளரும் அந்த காதல்
உன்னதமானது தான் ..!
இரு குடும்பகளின் மனதிலும்
சந்தோஷத்தை விதைத்து நம்பிக்கையோடு
வளர்க்கப்படும் இடத்தில்
வளரும் அந்த காதல்
உன்னதமானது தான் ..!
உனக்கு எல்லாமுமாக
கடைசி வரை இருப்பேன் என்று
கசிந்துருகி வாய்ஜாலம் பேசி
பேதையிடம் தேவையை
முடித்து கொண்டு இதயத்தை
ரணமாக்கி மாயமாகி போகும்
ரோமியோக்கள் இல்லாத வரை
காதல் புனிதமானது தான்
பண்பாடு புண்ணாகி போகாமல்
பாதுகாத்து வளர்க்க படும்
அந்த இடத்தில் காதல்
உன்னதமானது தான் ..!
உனது ஆடம்பர தேவைக்காய்
நல்ல கொழுத்த கெளுத்தி மீனுக்காய்
காத்திருக்கும் கொக்கை போல
உன் சிரிப்பை ரசித்து உன்
குள்ள நரித்தனம் அறியாத வெள்ளந்தியாய்
சிரித்தது ஒருவனின் குற்றம் என்று
அந்த அப்பாவியாய் காதல் என்ற பெயரில்
அவனின் கையிருப்பை கரைத்து
கிறுக்கனாய் அலைய விடாதவரை
காதல் புனிதமானது தான் ..!
காதல் இரு மனங்களின் சங்கமமாய்
மட்டும் இருக்கும் வரை
காதல் உன்னதமானது தான் ,
வாழ்க்கையில் கடைசி காலம் வரை
விட்டு கொடுத்து அதே காதலோடு
வாழ்ந்தால் காதல் புனிதமானது தான் ..!!