(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-iVjpUevGYPQ%2FVM9ePPRXNrI%2FAAAAAAAAO-4%2FSqM9dBe-Y18%2Fs1600%2F4.jpg&hash=f669373577b05b89876215796313cb5c6d77b5ce)
'ஃபிஃப்டி கே.ஜி தாஜ்மகால்’ என்று வர்ணிக்கப்படுவதை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதேசமயம்... அழகாவதற்காக, எது எதையோ முயற்சி செய்து பார்த்துவிட்டு, கடைசியில் கண்ணாடியைப் பார்த்து உதட்டைப் பிதுக்கிக்கொள்பவர்கள் பலர் உண்டு. மேலும் அழகாக இருந்தால் மட்டும் போதுமா? உடம்பில் பல பிரச்னைகள் இருந்தால், அதன் அவஸ்தை முகத்தைக் கடுகடுப்பாக ஆக்கத்தானே செய்யும்!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2015%2F02%2Fnjrlmg%2Fimages%2Fp103.jpg&hash=5350093fc2b7a5af90bc01f4507d5de63e67c2b5)
இதையெல்லாம் கருத்தில் கொண்டு, உணவுப்பழக்கம் மூலமாகவே உங்களை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் வகையில், பல்வேறு உணவுப் பொருட்களைப் பற்றி அலசி, ஆராய்ந்து, 30 வகை 'பியூட்டி ஹெல்த் ரெசிப்பி’க்களை இங்கே வழங்கும் சமையல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால், "கூடவே கொஞ்சம் உடற்பயிற்சியும் அவசியம்'' என்று வலியுறுத்துகிறார். இதையெல்லாம் டிரை பண்ணிப் பாருங்க... தன்னம்பிக்கையுடன் நடைபோடுங்க!