FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 02, 2015, 08:49:44 PM
-
கைம்மா கடலை!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-rUo4E2z_0vg%2FVM9zCLz8FmI%2FAAAAAAAAO_g%2FPkEuRyG8Hk4%2Fs1600%2F6.jpg&hash=39ab2263873e67ab8042d35a25eeb67b281c7fb4)
தேவையானவை:
கொண்டைக்கடலை - 100 கிராம், எலும்பில்லா ஆட்டிறைச்சி (நன்கு கொத்தி வாங்கவும்)- 100 கிராம், பெரிய வெங்காயம் - 2, கேரட் (பெரியது) ஒன்று, கழுவி சுத்தம் செய்த கொத்தமல்லித்தழை ஒரு கைப்பிடி அளவு, மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு டீஸ்பூன், மட்டன் மசாலா 2 டீஸ்பூன், எண்ணெய் ஒரு குழிக்கரண்டி, கடுகு ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை 2 ஆர்க்கு. தூள் உப்பு தேவையான அளவு, கட்டித்தயிர் ஒரு டேபிள்ஸ்பூன்.
அரைக்க:
சின்ன வெங்காயம்- 100 கிராம், தக்காளி- 3, இஞ்சி அரை இன்ச் துண்டு, பூண்டுப் பல்- 8, முந்திரிப் பருப்பு- 4.
செய்முறை:
கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே நன்கு ஊறவைக்கவும். அடுத்த நாள் கொத்துக்கறியில் தயிர் விட்டு ஊற வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மை போல் மிக்ஸியில் அரைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கேரட்டை துருவவும். குக்கரில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலையை தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு, அரைத்த மசாலாவை சேர்த்து , அதன்பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மட்டன் மசாலா சேர்த்து சுருள வதக்கி... ஊறிய கொண்டைக்கடலை, கொத்துக்கறி போட்டு வதக்கவும். தேவையான உப்பு, 3 டம்ளர் நீர் விட்டு... குக்கரை மூடி, வெயிட் போட்டு, 6 விசில் வரும்வரை வைத்து இறக்கவும். பின்னர் கேரட் துருவல், கொத்தமல்லித்தழை தூவவும். இதை பூரி, சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.