FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: MysteRy on January 29, 2015, 09:19:59 PM

Title: ~ குரல் மூலம் வழி நடத்தும் கூகுள் மேப் ~
Post by: MysteRy on January 29, 2015, 09:19:59 PM
குரல் மூலம் வழி நடத்தும் கூகுள் மேப்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-qhx2AjJfmaM%2FVMj_GPq8XeI%2FAAAAAAAAWHY%2FAFHg75BirGs%2Fs1600%2Fnexusae0_GoogleMaps-Thumb.png&hash=f74c1edc5887e8680c88e98b9c25fe328c1105c4)

கூகுள் மேப், அண்மையில் தன் வழிகாட்டுதலில், குரல் வழி வழிகாட்டுதலை, இந்தியாவில் உள்ள 20 நகரங்களுக்கு நீட்டித்துள்ளது.

ஒவ்வொரு தெருவழியாகவும் செல்ல நமக்கு, இந்திய ஆங்கில உச்சரிப்பில் வழி காட்டல் தரப்படும்.

இதனை அண்மையில் சென்னை விமான நிலையத்தில் சோதனை செய்தபோது, வீட்டிற்கு அருகே உள்ள மாரியம்மன் கோவில் வரை தெளிவாக வழி காட்டியது.

“இங்கு தெரியும் மாரியம்மன் கோவில் செல்லாமல், உடன் இடது பக்கம் திரும்பினால், உங்கள் வீட்டை அடையலாம்” என்று தெளிவான ஆங்கிலத்தில் உச்சரித்தது.

தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோயமுத்தூர் நகரங்களில் இந்த வசதி மொபைல் போன்களில் தரப்படுகிறது.

கூகுள் மேப்ஸ் தளத்தின் மூலம் இந்த வசதியைத் தந்து, கூகுள் அதன் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு கையடக்க நண்பனாக இயங்குகிறது. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டால், இந்த நகரங்களில் இது நிச்சயம் உதவியாக இருக்கும்.

இந்த வழி காட்டல் இந்தி மொழியிலும் தரப்படுவதாக, கூகுள் தன் வலைமனையில் அறிவித்துள்ளது. சென்ற ஜூலையில் தான், கூகுள் மேப்ஸ் இந்தி மொழிக்கான சப்போர்ட் தருவதாக அறிவித்து, நவம்பரில் இருந்து, இயக்கத்திற்குக் கொண்டு வந்தது.