FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on January 23, 2015, 09:50:21 PM

Title: ஒரு காசு
Post by: thamilan on January 23, 2015, 09:50:21 PM
'கடவுளே!
கோடி வருடங்கள் உன் கணக்கில்
எத்தனை?'
ஒரு நொடி!

" கோடி ரூபா?"
ஒரு காசு!

" அப்படியென்றால்
ஒரு காசு கொடேன் "

ஒரு நொடி பொறு
என்றார் கடவுள்
 
Title: Re: ஒரு காசு
Post by: Maran on January 24, 2015, 04:16:38 PM



அழகான சிந்தனைக்கவிதை.... வாழ்த்துக்கள்.



காசை,  ஏன் நண்பரே ?  கடவுளிடம் கேட்கிறீர்கள் !...
காசை அறிமுகப்படுத்தியவரும் அவரில்லை!
காசை மனிதர்களுக்கு கொடுத்தவரும் அவரில்லை !!

ஆனால் உங்கள் வரிகளில் ஒரு அழகிருக்கிறது...!!!



Title: Re: ஒரு காசு
Post by: thamilan on January 24, 2015, 06:47:22 PM
அவனின்றி ஓர் அணுவும் அசையாதது என்பது உண்மை தானே மாறன் நண்பரே