FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: MysteRy on January 19, 2015, 08:56:11 PM

Title: ~ ஸ்பார்டன் பிரவுசர் புதிய தகவல்கள் ~
Post by: MysteRy on January 19, 2015, 08:56:11 PM
ஸ்பார்டன் பிரவுசர் புதிய தகவல்கள்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-zJ9SkGELHds%2FVLPrc1-nGKI%2FAAAAAAAAV-w%2FXVSu4e9BUjI%2Fs1600%2FE_1420965354.jpeg&hash=eeed09b39da5fdd858078e0335bf5b1e37c88bca)

மைக்ரோசாப்ட் தற்போது வடிவமைத்து வரும் ஸ்பார்டன் பிரவுசர் குறித்து மேலும் பல தகவல்கள் கசிந்துள்ளன.

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வர இருக்கும் இந்த புதிய பிரவுசர், “ஸ்பார்டன்” என்ற குறியீட்டு பெயரைக் கொண்டுள்ளது.

இது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் மேம்பாட்டு தொகுப்பாக இருக்காது. முற்றிலும் புதிய ஒன்றாக வடிவமைக்கப்படும்.

வெப்கிட் கொண்டு வடிவமைக்கப்படாமல், Chakra JavaScript engine and Trident rendering engine கொண்டு வடிவமைக்கப்பட்டு வருகிறது.

சபாரி மற்றும் குரோம் பிரவுசர்கள், வெப்கிட் கொண்டு வடிவமைக்கப்பட்டவையாகும். விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் இணைத்து இது வழங்கப்படும். இதில் மொபைல் சாதனங்களில் இயங்கும் பதிப்பும் கிடைக்கும்.

குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்கள் போல, மிகக் குறைந்த இடத்தையே ஹார்ட் டிஸ்க்கில் எடுத்துக் கொள்ளும். எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை சப்போர்ட் செய்திடும். ஆனால், ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். சிஸ்டங்களில் இது இயங்குமா என தெரியவில்லை.

விண்டோஸ் 10 சிஸ்டத்துடன், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பும் வழங்கப்படும். இன்னும் பல வசதிகள் குறித்து ஜனவரி 21ல், மைக்ரோசாப்ட், விண்டோஸ் 10 வெளியிடுகையில் அறிவிக்கும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.