FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on January 17, 2015, 06:57:01 PM
-
நீலக் கடலில் துயில் எழுந்த
கதிரவனை பார்த்து
பனித்துளியில் குளித்த புல்லினம்
முகம் துடைத்துக் கொண்டது
இரவெல்லாம் காத்திருந்து
இளங்காலை பொழுதினில்
இரைதேடச் சென்றது
பறவைக் கூட்டம்
விடிகாலை பொழுதினில்
விடியலுக்காய் காத்திருந்து
தூங்க்கும் மனிதனை
துயில் எழுப்பியது சேவல்
எழுந்த மனிதன்
வீழ்ந்து கிடக்கிறான் மீண்டும்
படுக்கையில்
அக்றிணை
உயிர் கூட
அதன் கடமையை
தவறாமல் செய்கிறது
உயர்திணை
மனிதன் உறங்குகிறான்
நிஜத்தை தொலைத்து விட்டு
கனவுக்குள் கரைந்து போனவனுக்கு
இரவென்ன பகலென்ன
இரண்டும் ஒன்று தான்
விழித்தெலாத வரை
விடியல் இல்லை