FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on January 17, 2015, 10:32:03 AM

Title: அழியாத அவள் நினைவுகள்
Post by: thamilan on January 17, 2015, 10:32:03 AM
அவள்
இதயச் சுடரில்
எரிந்து சாம்பலானது
எனது கனவுத் தொழிற்சாலை

காதலில் ஏற்பட்ட
வீழ்ச்சி
என் இதயத்தில் 
இன்றில்லை மகிழ்ச்சி
கண்களிலோ நீர்வீழ்ச்சி

அவள் சொல்லுக்குள் இனிப்பு
அவள் மனதினில் ஏனோ கசப்பு
காலத்தின் தீர்ப்பு
இன்று நான்
கண்ணிருடன் தவிப்பு

சோக மனம் கொண்ட
வானுக்காக
இந்தக் காற்று கூட
கண்ணீர் வடிக்கிறது

எனக்காக மரணம் கூட
மறு பரிசீலனை செய்கிறது

ஆனால்
வஞ்சி உன் மனம் மட்டும்
இறுகிய பாறையாய்.....
என் விழிநீர் துடைக்க
உன் விரல் கேட்டேன்
நீயோ கொள்ளிக்கட்டையை எடுத்து
கண்ணில் சொருகுகிறாய்

காதல் வரம் கேட்டவனுக்கு
சாகவரம் கொடுத்துவிட்டு
சந்தோசப்படும் என் தேவதையே

என் கண்ணீரிலும்
உன் பெயரை தான் எழுதிப் பார்த்தேன்
உன் மூச்சிக் காற்றால்
முற்றிலும் அழிந்து போனது

என் நெஞ்சில் பதிந்த
உன் நினைவுகள் மட்டும்
அழியாமல் இன்னும் அப்படியே