FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: CybeR on January 10, 2015, 11:55:08 PM

Title: கண்ணீருடன் ஒரு காதல்
Post by: CybeR on January 10, 2015, 11:55:08 PM
மழையில் நனையும் மழலையாய் நின்றேன்
காய்ச்சல் வருமென்று தெரியவில்லை போலும்
காற்றை எதிர்த்து கை தூக்கி நின்றேன்
கண்ணீர் வருமென்று தெரியவில்லை போலும்
உள்ளம் எதனையோ தேடுகிறது என்றேன்
அது மரணம் என்று தெரியவில்லை போலும்
உடைந்த மரக்கிளையில் ஒற்றை கிளியாய் நிற்கின்றேன்
'உடைந்து போன உள்ளத்திற்கு உயிர் ஒரு கேடா !' என்று...
Title: Re: கண்ணீருடன் ஒரு காதல்
Post by: பவித்ரா on January 15, 2015, 06:45:03 PM
ennachi ji over sad irukinga pola