தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on January 09, 2015, 02:27:20 PM
Title: என் காதல் தேவதைக்கு
Post by: thamilan on January 09, 2015, 02:27:20 PM
தீடீர் என வந்த மழை போல பளீர் என மின்னிய மின்னல் போல என் மனதில் இறங்கியவள் நீ சொல்லாமல் வந்து சுருட்டிச் செல்லும் சுனாமி போல சுருட்டிச் சென்றாய் என் இதயத்தை
பார்க்காமல் காதல் பேசாமல் காதல் செல்போனில் காதல் இன்டர்நெட்டில் காதல் இப்படி எது எதுவோ கருவாக படங்கள் வந்தன நான் நம்பவில்லை உன்னுடன் பேசும் வரை
காய்ந்த மண்ணில் விழுந்த மழைத் துளிகளாக ஈரமானது எனது மனது உனது பேச்சால் மழை விழுந்ததும் மண்ணில் இருந்து தளிர்விடும் செடிகள் போல உன் அன்பான பேச்சால் என் மனதிலும் காதல் செடிகள் தளிர் விட்டன
அதிகம் பேசாத நான் விடாமல் பேசத் தொடங்கினேன் உனது பெயரை அமைதியான நான் கொந்தளிக்கும் கடல் ஆனேன் உன் நினைவால்
இது வரை உன்னை பார்த்ததில்லை இனியும் பார்க்க்கவிட்டாலும் பரவாயில்லை உன் நினைவு ஒன்றே போதும் உன் நினைவில் நான் வாழ
Title: Re: என் காதல் தேவதைக்கு
Post by: பவித்ரா on January 09, 2015, 06:27:01 PM