FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on January 09, 2015, 01:40:42 PM
-
ஆரஞ்சு பழத்தின் தோலில் நிறைந்துள்ள ஆச்சரியப்பட வைக்கும் நன்மைகள்!
ஆரஞ்சு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! இந்த கட்டுரையின் வழியாக ஆரஞ்சுப் பழத்தோலின் பலவிதமான பயன்பாடுகளைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போகிறோம். தயாராகிக் கொள்ளுங்கள்.
கொழுப்பைக் குறைக்கும் ஆரஞ்சுப் பழத்தின் தோலில் கொழுப்புகளைக் குறைக்கும் அத்தனை குணங்களைக் கொண்டுள்ள சத்துக்கள் நிரம்பியுள்ளன.
இந்த சத்துக்களைக் கொண்டு நமது உடலிலுள்ள LDL அல்லது ‘மோசமான’ கொழுப்புகளை எதிர்த்துப் போராடி, இதயத்திற்கும் செல்லும் குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் தவிர்த்திட முடியும். எனவே, உங்களுடைய உணவில் ஆரஞ்சுப் பழத்தின் தோலை தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் கொழுப்புகளை ஓட ஓட விரட்ட முடியும்.
புற்றுநோயைத் தவிர்க்கும் ஆக்ஸிஜன் இல்லாத கிருமிகளை விரட்டுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான செல்களிலிருந்து ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ளும் குணத்தையும் ஆரஞ்சுப் பழத்தோல் கொண்டுள்ளது. இதன் மூலம் புற்றுநோயை வளர்க்கும் செல்களின் வளர்ச்சி முழுமையாகத் தவிர்க்கப்படுகிறது.
சுவாசம் ஆரஞ்சுப் பழத்தோலில் அபரிமிதமாகக் குவிந்து கிடக்கும் வைட்டமின் சி ஒரு மிகச் சிறந்த நோய் எதிர்ப்புச் சத்தாகும். ஆரஞ்சு பழத்தின் வைட்டமின் சி-யில் உள்ள ஆக்சிஜன் எதிர்ப்பு பொருட்கள் மூச்சுக்குழாய் அழற்சி (Bronchitis), சளி, ப்ளூ, ஆஸ்துமா மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றிலிருந்து விடுபட பெரிதும் உதவுகின்றன.
அஜீரணம் பழங்காலத்தில் ஆரஞ்சுப் பழத்தின் தோலை மருத்துவ குணத்திற்காக, அதை பொக்கிஷம் போல மக்கள் பாதுகாத்து வந்திருந்தார்கள்.
ஆரஞ்சுப் பழத்தோலிலிருந்து எடுக்கப்பட்ட சத்துக்கள் அஜீரணம் உட்பட பல்வேறு வகையான ஜீரணக் கோளாறுகளை குணப்படுத்த உதவி செய்துள்ளன. இந்த தோலிலுள்ள உணவுக்கான நார்ச்சத்துக்கள் குடலின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதால், ஜீரண அமைப்பு நன்றாக இயங்கும்.
ஆரஞ்சுப் பழத்தோலின் இதர பலன்கள் மேற்கண்ட ஆரோக்கிய பலன்கள் மட்டுமல்லாமல், வேறு சில பயன்பாடுகளையும் ஆரஞ்சுப் பழத்தோல் பெற்றுள்ளது. இந்த தோல்களைக் கொண்டு ஆரஞ்சு வாசனையைத் தரும் திரவத்தை தயாரிக்க முடியும். ஆரஞ்சுப் பழத்தோலின் சில புதுமையான பயன்பாடுகளைப் பற்றி இப்பொழுது பார்ப்போமா!
பற்கள் பளிச்சிட மஞ்சள் கறை படிந்துள்ள பற்களை பளிச்சிட உதவும் மிகவும் மலிவான மற்றும் இயற்கையான வழிமுறை ஆரஞ்சுப் பழத்தோல்களைப் பயன்படுத்துவதே. நீங்கள் ஆரஞ்சுப் பழத்தோலை பசையாகவோ அல்லது நேரடியாக தோலை பற்களின் மீதோ தேய்ப்பது தான் நீங்கள் செய்ய வேண்டிய வேலை.
மிகவும் சென்சிடிவ்வான பற்களில் இவ்வாறு செய்யலாமா என்று பலரும் யோசித்திருப்பார்கள். ஆனால் உண்மை நேர்மாறானது! பற்களில் ஏற்படும் கூச்சத்தை சரி செய்யும் குணமும் ஆரஞ்சுத் தோல்களுக்கு உள்ளது என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
சருமம் பளபளக்க வேண்டுமா? இயற்கையாகவே சருமத்தை பளபளப்பாக்கும் குணத்தை ஆரஞ்சுப் பழத்தோல் கொண்டுள்ளது. ஆரஞ்சுப் பழத்தோலின் சாற்றை தோலில் தடவிக் கொள்ளும் போது, தோல் பகுதி மென்மையாக மாறவும் மற்றும் கருப்பான கறைகள் மறையவும் கூடும்.
ஆரஞ்சுப் பழத்தோல்களை சருமத்தில் பயன்படுத்துவது பாதுகாப்பானதும் கூட. ஆரஞ்சுப் பழத்தோலை அதிக அழுத்தமில்லாமல் சருமத்தில் தடவுவதையும் மற்றும் எரிச்சலைத் தடுக்க ஆரஞ்சு பசையை பயன்படுத்துவதும் நல்லது.
சருமத்தை பளபளக்கச் செய்வதோடு மட்டுமல்லாமல், மென்மையாக மாற்றவும், இயற்கையாக அதன் துளைகளை சுத்தம் செய்யவும் மற்றும் தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்களிடமிருந்து பாதுகாக்கும் கவசமாக இருக்கவும் ஆரஞ்சுப் பழத்தோல் உதவும்.
சமையலுக்கும் ஆரஞ்சு ஆரஞ்சுப் பழத்தை முதன்முதலில் விளைவித்து அறுவடை செய்து வந்த காலங்களில், அதன் தோல்கள் மிகவும் கவனமாக பாதுகாக்கப்பட்டு வந்தன.
உணவுகளை சமைக்கும் போது, அவற்றை அழகுபடுத்தவும் மற்றும் புளிப்புச் சுவையை உணவில் கொடுக்கவும் அவை பயன்படுத்தப்பட்டன. இன்றும் கூட, ஆரஞ்சுப் பழத்தின் இயற்கையான ஊட்டச்சத்துப் பலன்களை எண்ணற்ற வழிமுறைகளில் உணவுகளில் பயன்படுத்திப் பலன் பெறலாம்.
எச்சரிக்கை ஆரஞ்சுப் பழத்தோலைப் பயன்படுத்தும் போது, பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தாத, உயிரோட்டமுள்ள சூழலில் வளர்க்கப்பட்ட ஆரஞ்சுப் பழங்களை வாங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
ஏனெனில், இன்று சந்தைகளில் விற்கப்படும் ஆரஞ்சுப் பழங்களில் பலவும் செயற்கை உரங்களால் வளர்க்கப்பட்டவைகளாக உள்ளன. இவற்றிலுள்ள வேதிப்பொருட்கள் உங்களுடைய சருமத்திற்குள் செல்வது நல்லதன்று.