FTC Forum
Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: MysteRy on January 08, 2015, 05:04:26 PM
-
‘வாட்ஸ் ஆப்’-ல் ‘ஸ்கைப்’ மூலம் கால் செய்யும் வசதி
வாட்ஸ் ஆப் வலைத்தளத்தில் ‘வாய்ஸ் காலிங்’ வசதி விரைவில் வெளியாக உள்ளது. உடனடியாக மெசேஜ் செய்யும் அப்ளிகேஷனில் முன்னிலையில் இருந்து வருகிறது வாட்ஸ் ஆப். அண்மையில், ‘வாய்ஸ் காலிங்’ வசதிக்கான இண்டர்பேஸ் பல இணையதளங்களில் வெளியானது.
அதேபோல், இப்போது ‘ஸ்கைப்’ மூலம் கால் செய்யும் வசதியையும் ‘வாட்ஸ் ஆப்’-ல் இணைக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப செய்திகளை வழங்குவதில் பிரபலமான Maktechblog இந்த தகவலை ‘லீக்’ செய்துள்ளது. ‘வாட்ஸ் ஆப்’-ன் நவம்பர் மாத அப்டேட்டிலேயே இந்த புதிய “Call via Skype” வசதிக்கான ரெபரென்ஸ் இருந்ததாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.
இதுதவிர, அழைப்பை நிறுத்தி வைக்கும் ‘Call Hold’ வசதி, ‘Call Mute’ வசதி, ‘Call Back’, ‘Call Back Message’, ‘Call Me in X minutes’, ‘Call Notifications’ போன்ற வசதிகளும் இடம்பெற உள்ளது. ‘Call logs’ -களுக்காக தனித்தனியே ஸ்கீரின்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்ல, வாகனங்களை டிரைவ் செய்து கொண்டிருக்கும் போது மெசேஜ்கள் மற்றும் அழைப்புகளை read out செய்வதற்கு வசதியாக ‘Driving Mode’ மற்றும் ‘Do Not Disturb’ வசதியும் விரைவில் ‘வாட்ஸ் ஆப்’-ல் வெளிவர உள்ளதாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.