FTC Forum
Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: MysteRy on January 08, 2015, 05:02:06 PM
-
Windows phone யூஸ் பண்றீங்களா?? உங்களுக்கான சில குறிப்புகள்!
உலகளவில் தற்போது, ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்குப் பிறகு அதிகளவில் விண்டோஸ் ஃபோன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
பிரச்சனைகள் வரவில்லை என்றால் அது ஸ்மார்ட்ஃபோனே இல்லை. அந்தளவிற்கு ஸ்மார்ட்ஃபோன்களும் அதன் பிரச்சனைகளும் பிரபலம்.
அந்தவகையில் விண்டோஸ்ஃபோன்களில் அதிகமாக ஏற்படும் சில பிரச்சனைகளை எப்படி சரி செய்யலாம் என்பதை காணலாம்.
Restart
சில ஃபோன்கள் அடிக்கடி ரீஸ்டார்ட் ஆகிக்கொண்டே இருக்கும். இந்த பிரச்சனையை சரி செய்ய மைக்ரோசாப்ட் கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவில் மட்டும் OTA அப்டேட் வழங்கியது, இது பிரச்சனையை சரி செய்ததாக கூறப்பட்டாலும் சிலர் இந்த அப்டேட் செய்யப்பட்ட பின்பும் ரீபூட் பிரச்சனை ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். இதனை முழுமையாக சரிசெய்யவேண்டுமெனில் அனைவருக்கும் தெரிந்த ஒரே வழிதான். ஃபோன் ரீசெட் செய்துவிடுங்கள்.
Camera
சில சமயம் கேமரா சரியாக வேலை செய்யாமல் இருக்கும். இதற்கு உங்கள் ஃபோன் அப்டேட் ஆகமல் இருப்பது கூட காரணமாக இருக்கலாம். எனவே முதலில் அதை சரி பாருங்கள், ரீசெட் செய்து பாருங்கள். இம்முறை இந்த பிரச்சனை நிச்சயம் சரி செய்யப்பட்டு விடும். திரும்பவும் இந்த பிரச்சனை ஏற்பட்டால் போனை அருகிலுள்ள கஸ்டமர் கேருக்கு கொண்டு செல்லுங்கள்.
Black screen
நீங்கள் கால் பேசும்போது, ஸ்க்ரீன் கருப்பாகி விடுகிறதா?? Proximity சென்சார் தான் காரணம். இந்த சென்சார் முன்பக்க கேமராவிற்கு அருகில் இருக்கும். இந்த சென்சாரை ஸ்கிரீன் கார்டு மறைத்துள்ளதா என்பதை சரி பாருங்கள். அதில் தூசி இருந்தாலும் இந்த பிரச்சனை ஏற்படலாம், அதனால் ப்ராக்ஸிமிட்டி சென்சார் பகுதியை சுத்தமாக வைத்தால் இந்த பிரச்சனை சரியாகி முடியும்.
Screen not working
ஹேங் ஆகின்றதா? நிச்சயம் போனை நீங்கள் அப்டேட் செய்திருக்க மாட்டீர்கள். எனவே எதேனும் அப்டேட் உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள். உங்கள் ஸ்மார்ட்ஃபோனை அப்டூ டேடாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம்.
Battery
இது அனைத்து ஸ்மார்ட் ஃபோன்களிலும் இருக்கும் ஒரு பிரச்சனைதான். இதற்கு உங்கள் ஃபோனில் Background அப்ளிகேஷன்களை கண்ட்ரோல் செய்தாலே போதும்.