FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on January 08, 2015, 02:22:19 PM
-
பசுப்பாலா? எருமைப்பாலா? இரண்டில் எது நல்லது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!
பசுப்பாலா? எருமைப்பாலா? இரண்டில் எது நமக்கு நல்லது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எருமைப்பால் குடித்தால் சோம்பேறி ஆகி விடுவார்கள் என்று பெரியவர்கள் கூறும் கட்டுக் கதைகளை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு கொஞ்சம் கீழே உள்ளவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
எருமைப்பால்:
97 கலோரிகள், புரோட்டீன் 3.7 கிராம், கொழுப்பு 6.9 கிராம், தண்ணீர் 84 %, லாக்டோஸ் 5.2கிராம், கனிமச்சத்து 0.79 கிராம்.
பசும்பால்:
61 கலோரிகள், புரோட்டீன் 3.2 கிராம், கொழுப்பு 3.4 கிராம், தண்ணீர் 90 %, லாக்டோஸ் 4.7 கிராம், கனிமச்சத்து 0.72 கிராம் நீங்கள் உங்கள் எடையைக் குறைக்க நினைத்தால் பசும்பால் உங்களுக்கு ஏற்றது. 100 மிலி எருமைப்பாலில் காணப்படும் 97 கலோரிகளை ஒப்பிடும் போது அதே அளவு பசும்பாலில் 61 கலோரிகள் மட்டுமே உள்ளது. பசும்பாலைப் போல (3.4 கிராம்) எருமைப்பாலில் ஏறக்குறைய இருமடங்கு கொழுப்பு நிறைந்துள்ளது (6.9 கிராம்). உடம்பில் சதை போட விரும்புபவர்கள் எருமைப்பாலை குடிக்கலாம்.
பசும்பாலை விட அதிக புரோட்டினும், அதிக கொழுப்பும் இருப்பதால், எளிதில் சத்து போடலாம். பசும்பாலை ஒப்பிடுகையில் எருமைப்பாலில் 15 சதவிகிதம் கூடுதல் புரோட்டீன் உள்ளது. ஆனால், உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் இருந்தால் பசும்பாலே ஏற்றது. எருமைப்பால் பசும்பாலை விட அடர்த்தியானது. ஏனென்றால் பசும்பாலில் 90 சதவிகிதம் தண்ணீர் உள்ளது.