FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on January 08, 2015, 02:11:15 PM

Title: ~ நீண்ட கால சோர்வு : இந்த நோயை கட்டுப்படுத்த உதவும் உணவுகள் ~
Post by: MysteRy on January 08, 2015, 02:11:15 PM
நீண்ட கால சோர்வு : இந்த நோயை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்

‘நீண்ட கால தொடர் சோர்வு’ என்பது எந்த வேலை செய்யாவிடினும், நல்ல ஓய்விற்குப் பின்னும் நீங்காது ஆறு மாத காலத்திற்கு மேல் தொடர்ந்து இருப்பதாகும். இதற்கு வேறு காரணங்களும் இருந்திருக்காது. இதன் அறிகுறிகள்:

* சிறிது வேலையும் செய்ய முடியாமை

* உடல் வலி

* தொண்டை பாதிப்பு

* தலைவலி

* எதிலும் கவனம் செலுத்த முடியாமை

* ஜீரணக் கோளாறு

* நெறி கட்டியிருத்தல்

* நுரையீரல், இருதய பிரச்சினைகள் பொதுவில் சோர்வு என்பது சாதாரண சளி, ஜுரத்திலிருந்து பெரிய பாதிப்பு வரை ஏற்படுவதுதான். ஆனால், தொடர் சோர்வு எந்தவித உறுப்பின் பாதிப்பு காரணமும் இல்லாமல் இருக்கும்.

ஆரம்பத்தில் ‘ப்ளூ’ ஜுரம் போல் சில அறிகுறி இருந்தாலும், அநேகருக்கு தொடர் மன உளைச்சலும் ஒரு முக்கிய காரணம் ஆகின்றது. இவர்கள்

* உட்காரும்போது கூட தொய்வாக உட்காருவார்கள்.

* அடிக்கடி மயங்கி விழுவார்கள்.

* அடிக்கடி உடல் சில்லிப்பது போல் இருக்கும்.

* இரவு வேர்வை.

* பார்வை கோளாறு, கண் வலி, மன உளைச்சல் போன்றவை இருக்கும்.

சிலர் இத்தகைய பாதிப்பிலும் ஓரளவு சராசரி வாழ்க்கையினை மேற்கொள்வர். சிலர், இதில் படுத்த படுக்கையாகி விடுவர். இந்த பாதிப்பிற்கு குறிப்பிட்ட சோதனை என்பது கிடையாது.

பொதுவில் சில அடிப்படை பரிசோதனைகளையும், மருத்துவர் நோயாளியின் நிலையை அறிந்தும் முடிவு செய்வார். மருத்துவ சிகிச்சை முறையில் இதற்கு முழு தீர்வு காண்பது கடினம்.

உணவு முறை, யோகா, தியானம் இவற்றிலும் முன்னேற்றத்தினை காண முடியும். மருத்துவர், பயிற்சியாளர் இவர்களால் பரிந்துரைக்கப்படும் குறிப்பிட்ட உடற்பயிற்சி நல்ல முன்னேற்றத்தினை அளிக்கும்.

மது, காபி, டீ தவிர்ப்பது மிக மிக நல்லது. பொதுவில் இத்தகு பாதிப்பு உள்ளவர்கள் தைராய்டு சுரப்பி, ரத்த சோகை, சர்க்கரை நோய் இவற்றிற்காகவும் பரிசோதித்துக் கொள்வது நல்லது.

இந்த நோயை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்:

* முழு தானிய உணவு

* நார்ச்சத்து மிகுந்த ஓட்ஸ் உணவு

* பச்சை காய்கறிகள்

* காபி, டீ தவிர்த்தல்

* கொழுப்புச்சத்து இல்லாத பால் வகை உணவு இத்தாக்குதலின் வீரியத்தினைக் கட்டுப்படுத்தும்.

* கலர் நிறைந்த காய்கறிகள் அதாவது காரட், பீட்ரூட், கீரை போன்றவை

* வெள்ளை சர்க்கரை சேர்த்த உணவுப் பொருட்களை அடியோடு தவிருங்கள்.

* தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.

* பழங்கள் மிகச்சிறந்த உணவு.