FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on January 08, 2015, 02:05:17 PM
-
ஆரோக்கிய வாழ்வு தரும் உடல சுரப்பு அமிலங்கள்!
பல வகையான சத்துகளும், வைட்டமின்களும் சேர்ந்து தான் நம்மை ஆரோக்கியமாக செயல்பட வைக்கிறது. ஒவ்வொரு உணவுகளில் இருந்து பெறப்படும் சத்துக்களும் ஒவ்வொரு உறுப்பை பாதுகாக்கிறது. சில வைட்டமின்கள் அமிலங்களாக உடலுக்கு சத்துக்களை வழங்குகிறது. இவை இயற்கையாகவே சுரக்கும் தன்மை கொண்டிருந்தாலும், இவற்றில் சில மாறுபாடுகள் ஏற்படும் போது அதாவது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சுரக்கும் போது பாதிப்புகள் ஏற்பட ஆரம்பிக்கிறது.
உடல்நலனுக்கு இன்றியமையாத சில முக்கியமான அமிலங்கள், பயன்கள் எந்த வகையான உணவு மூலம் பெறலாம் என்பதையும் அறிந்துகொள்வோம்.
நிக்கோடினிக் அமிலம்:
இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை நிலைப்படுத்த நியாசின் பெரிதும் உதவுகிறது. இந்த அமிலத்தின் அளவு குறையும் போது அதிகப்படியான டென்ஷன், சத்துக்குறைபாடு, எரிச்சல், ஞாபகமறதி, போன்ற பாதிப்புகள் தாக்ககூடும். முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டு ஈரல், பாதாம் மற்றும் பருப்பு வகைகள், முழு தானியங்கள், போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வதால் அமிலத்தின் அளவை அதிகரிக்கலாம்.
போத்தொடெனிக் அமிலம்:
உடம்புக்கு தேவையான சத்துக்களை உற்பத்தி செய்ய பெத்தோடெனிக் அமிலம் தேவை. இது மனிதனின் மூளை, நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளுக்கு மிகவும் உதவிபுரிகிறது. கவனமின்மை, பல்வலி, வாந்தி மற்றும் சத்து குறைபாடு, போன்ற பாதிப்புகள் போத்தொடெனிக் அமிலம் குறைவதனால் ஏற்படுகிறது. முழுதானியங்கள், பருப்பு வகைகள், முட்டை, மஞ்சள் கரு, ஆகிய உணவுகளை உணவில் சேர்த்தால் சரி செய்துவிடலாம்.
ஆஸ்கார்பிக் அமிலம்:
வைட்டமின் சி தான் அஸ்கார்பிக் அமிலம் பி, காம்ப்ளெக்ஸ், வைட்டமின்களில் முக்கியமான வைட்டமின் இது. இந்த வைட்டமின்கள் தசை வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சத்தியை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இரும்புச்சத்தை உணவிலிருந்து உறிஞ்சுவதற்கும், கேன்சர் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. பால், முட்டை, ஈரல், ஈஸ்ட், கீரை, ஓட்ஸ், மற்றும் பருப்பு போன்ற உணவின் மூலமும் இந்த அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.