FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: MysteRy on January 06, 2015, 05:20:02 PM

Title: ~ ஐபோன் அடிமைகளை கண்டறிவது எப்படி.! ~
Post by: MysteRy on January 06, 2015, 05:20:02 PM
ஐபோன் அடிமைகளை கண்டறிவது எப்படி.!

ஐபோன் பயனாளிகளில் பெரும்பாலானோர் தங்களது ஸ்மார்ட்போன் தான் சிறந்தது என்று கூறுவர். சமீபத்திய ஆய்வில் ஐபோன் பயன்படுத்துபவர்கள் வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போனை பயன்படுத்த மாட்டார்கள் என்றும் ஐபோன் பயனாளிகள் ஐபோன்களை எந்த நிலையிலும் விட்டு கொடுக்க மாட்டார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
அவர்களை அந்தளவு ஐபோன்கள் ஏன் கவர்கின்றன என்று தான் இன்று நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள். மேலும் ஐபோன் அடிமைகளை எளிதாக கண்டறிய முடியும் என்றும் அவர்கள் ஏன் அவ்வாறு இருக்கின்றனர் என்றும் பாருங்கள்…

1. பயன்படுத்தும் போன் ஏன் வேகம் குறைவாக இருக்கின்றது என்று நாள் முழுவதும் புலம்பி தீர்த்திருப்பீர்கள்.
2. கூகுளில் தேடலில் பட்டம் பெற்றிருப்பீர்கள். ஆப்பிள் அல்லது ஐபோன் என்ற தலைப்புகளில் அனைத்தையும் அறிந்திருப்பீர்கள்
3.கீநோட், விளம்பரம் மற்றும் அனைத்து தகவல்களையும் நாள் ஒன்றிற்க்கு இருமுறையாவது பார்த்திருப்பீர்கள்
4.புதிய வகை ஐபோன் விற்பனைக்கு வராதது அறிந்திருந்தும் இணையம் முழுக்க அதனை வாங்க முடியுமா என்று பார்ப்பீர்கள்
5. கனவில் நீங்கள் ஏற்கனவே வெளியாகாத ஐபோனை வாங்கியிருப்பீர்கள், அது உங்களுக்கு கன கச்சிதமாக இருக்கும்.
6. உங்களது நாள் ஐபோன் மூலம் துவங்கி மீண்டும் ஐபோன் பேச்சை கொண்டே நிறைவடையும்.
7. புதிய ஐபோனை வாங்க மற்றவர்களை காட்டிலும் அதிக பணம் மிச்சப்படுத்தியிருப்பீர்கள்
8. புதிய ஐபோனை வாங்க அமெரிக்காவில் இருக்கும் உங்களது சொந்தங்கள் அல்லது நண்பர்களுக்கு ஏற்கனவே லஞ்சம் கொடுத்திருப்பீர்கள்