FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on January 04, 2015, 11:57:57 AM
-
அதிக அளவில் ஹைட்ரோ பவர் மின்சாரத்தை உற்பத்தி செய்து சீனா உலக சாதனை
சீனாவிலுள்ள திரீ ஜார்ஜஸ் பவர் பிளாண்ட் 2014ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 98.8 பில்லியன் கிலோவாட்-அவர்ஸ் ஹைட்ரோ பவர் மின்சாரத்தை உற்பத்தி செய்து உலக சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்னதாக பிரேசில் நாட்டின் தைபூ ஹைட்ரோ எலக்ட்ரிக் பிளாண்ட், 2013ஆம் ஆண்டில் மட்டும் 98.6 பில்லியன் கிலோவாட் ஹவர் மின்சாரத்தை உற்பத்தி செய்திருந்தது.
இன்ஸ்டால்டு கெபாசிட்டி குறைவாக இருந்தாலும் பிரேசிலின் ஹைட்ரோ எலக்ட்ரிக் பிளாண்டு தொடர்ந்து பல ஆண்டுகளாக மின் உற்பத்தியில் முதலிடத்தில் இந்துவந்தது.
இந்நிலையில், சீனாவின் த்ரீ ஜார்ஜஸ் பிளாண்ட் 98.8 பில்லியன் அளவை தாண்டி மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது என்பது குறிப்பித்ததக்கது.