FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: MysteRy on January 04, 2015, 11:48:40 AM

Title: ~ வைபை ஸ்லோவா இருக்கிறதா…? பாஸ்ட் ஆக்குவதற்கு..! ~
Post by: MysteRy on January 04, 2015, 11:48:40 AM
வைபை ஸ்லோவா இருக்கிறதா…? பாஸ்ட் ஆக்குவதற்கு..!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.professionalpensions.com%2FIMG%2F412%2F161412%2Fangry-laptop-user-170x170.jpeg%3F1416919791&hash=1dd6a6aa84281646a954609a07386868ab1495ea)

கணினி மற்றும் லாப்டாப்களுக்கு வைபை மூலம் இன்டெர்நெட் பபயன்படுத்துறீங்களா, நீங்க யூஸ் பன்னும் வைபை அடிக்கடி ஸ்லோ ஆகிடுதா, இன்டெர்நெட் தானாக டிஸ்கனெக்ட் ஆகிடுதா, இதே பிரச்சனை வைபை பயன்படுத்தும் எல்லோருக்குமே இருக்கும். வைபை நெட்வர்க்கில் பிரச்சனை இல்லாமல் வேகமான இன்டெர்நெட் வசதியை பெருவதற்கு

ஹார்டுவேர்

வேகமான வைபைக்கு முக்கியமாக அப்-டூ-டேட் ஹார்டுவேரை பயன்படுத்தலாம். இதற்கு, வயல்ரெஸ் என் சிறந்ததாக இருக்கும்

ரவுட்டர்

ரவுட்டர் பார்க்க அழகாக இல்லை என்று அதை மறைத்து வைக்க கூடாது, நல்ல காற்றோட்டமான இடத்தில் வைத்தால் தான் முழுமையான சிக்னல் கிடைக்கும்

வயர்லெஸ் சேனல்

அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் வைபை உங்களது வைபைக்கு இடையூறாக இருக்கலாம், இதை சரி செய்ய, வைபை ஸ்டம்ப்ளர் அல்லது வைபை அனலைஸர் போன்றவற்றை பயன்படுத்தி, வைபையை சரியான சேனல் கிடைக்கும் இடத்தில் பொருத்தலாம்.

மற்ற சாதனங்கள்

வீட்டில் பயன்படுத்தும் கார்டுலெஸ் போன், மைக்ரோவேவ் போன்றவகளும் வைபை சிக்னலை பாதிக்கும். இதனால், டூயல் பேன்ட் ரவுட்டரை பயன்படுத்தலாம்

வைபை திருடர்கள்

ரவுட்டருக்கு பாஸ்வேர்டு இருந்தாலும் அதை சுலபமாக களவாட முடியும், அதனால், WPA பாஸ்வேர்டை பயன்படுத்த வேண்டும்.

பேன்ட்வித்

வைபை பயன்படுத்தும் போது வீட்டில் யாரேனும் அடிக்கடி வீடியோ சாட், டோரென்ட் டவுன்லோடு என எதையவது செய்யலாம், இது மற்ற எல்லாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும், இதை சரிகட்ட QoS பயன்படுத்தலாம்.

சிக்னல்

ரவுட்டர் சரியாக சிக்னல் கிடைக்காத சமயத்தில் பழைய பாட்டில்களை ரவுட்டர் மேல் பொருத்தலாம், இது ஓரளவு கைகொடுக்கும்

ஹாக்கிங்

வைபை ரேன்ஜ் அதிகரிக்க DD-WRT firmware இன்ஸ்டால் செய்யலாம், இது ஒரு வகையில் ஆபத்தானது என்றாலும் சில ரவுட்டர்கள் 70 மெகாவாட் வரை தாங்கும் திறன் கொண்டது

வைபை ரிப்பீட்டர்

பழைய வயர்லெஸ் ரவுட்டரை எக்ஸ்டென்டர் ஆக பயன்படுத்தலாம், இதற்கு DD-WRT firmware அவசியம் தேவை.

ரீபூட்

ரவுட்டரை நாள் ஒன்றுக்கு ஒரு முறை ரீபூட் செய்ய வேண்டும்.