பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2015)
நண்பர்கள் கவனத்திற்கு,
எதிர் வரும் பொங்கல் தினத்தை முனிட்டு .. சிறப்பு கவிதை நிகழ்சிக்காக தங்கள் கவிதைகளை வழங்குமாறு கேட்டுகொள்கிறோம் ... நண்பர்கள் இணையதள வானொலியூடாக உங்கள் கவிதைகள் பொங்கல் தினத்தன்று தொகுத்து வழங்கப்படும். எதிர்வரும் வெள்ளி கிழமைக்கு (09-01-2015) முன்பாக கவிதைகளை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சொந்தமாக எழுதப்படும் கவிதைகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும்.
இன்று பொங்கல் திருநாளாம்
பொங்கல் வைக்கலாம் என்று பார்த்தால்
அரிசியில் இருந்த தரத்தில் கலப்படம்
வெள்ளத்தில் சுண்ணாம்பு கலந்து கலப்படம்
கரும்பு வாங்கினால் கசக்கிறது
அதிகளவு மருந்து போலும் !
மஞ்சள் வாங்கினால் அது மணக்கவில்லை
அடடா அதிலும் கலப்படம்
குங்குமம் வாங்கி நெற்றியில்
வைத்தால் அரிகிறது நெற்றி அதிலும் கலப்படம்
சந்தனம் வாங்கினால் மரதூலில்
வண்ணமும் வாசனையும் சேர்த்து
அதுவும் கலப்படம் போல !
விவசாயியே நீ இந்த நாட்டின் முதுகெலும்பு
அதனால் தான் உன்னை ஒடிக்க பார்கிறார்கள்.
அரசியல் வாதியும் தொழிலதிபரும்
பணத்திற்கு துணை நிற்பவன்
நீ நேராக நிமிர்ந்து நில் !
சாதுர்யமாக எதிர்த்து போராடு
இயற்கை உனக்கு எல்லாம் கொடுத்து இருக்கிறாள் ...
ஊருக்கே சோறு போடுபவன் நீ
இயற்கை விவசாயத்தை மேற்கொள்!
உன் தலைமுறைக்கும் சொல்லி கொடு
நவீன தொழில் நுட்பத்திற்கு தடை சொல்!
பாரம்பரிய பயிர் சுழற்சி உழவு முறையை மேற்கொள்
எவன் தடுப்பான் உன்னை!
இயற்கை விவசாயம் வாழ்வை மேம்படுத்தும்
சுற்று சுழலை பாதுகாக்கும் .
உன் வாழ்வை செழிப்பாகும்
எதிர்கால சந்ததியின் ஆயுளை கூட்டும் .
அப்போது கொண்டாடு ஆனந்தமாக பொங்கலை ..!