FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: ஸ்ருதி on December 18, 2011, 07:10:06 AM

Title: இய‌ற்கை ‌முறை‌யிலான அழகு‌க் கு‌றி‌ப்புக‌ள்!
Post by: ஸ்ருதி on December 18, 2011, 07:10:06 AM
முக அழகை பேண முட்டையின் மஞ்சள் கருவுடன் தேனை கலந்து முகத்தில் தடவ வேண்டும்.

மீத‌மிரு‌க்கு‌ம் வெ‌ள்ளையை எ‌ன்ன செ‌ய்வது எ‌ன்று யோ‌சி‌‌க்கா‌தீ‌ர்க‌ள். அதனை தலை‌யி‌ல் தே‌ய்‌த்து‌க் கு‌ளி‌‌த்து‌ப் பாரு‌ங்க‌ள். சிற‌ந்த க‌ண்டீஷனராக இரு‌க்கு‌ம்.

கண்களை மூடி அவற்றின் மீது மெலிதாக வெட்டிய வெள்ளரித் துண்டுகளை வைக்கவும்.

வீட்டிலிருக்கும் போது பால் ஏடுகளை முக‌த்‌தி‌‌ல் தே‌ய்‌த்து வரவு‌ம்.

பன்னீரில் நனைத்த பஞ்சுத் துண்டை பத்து நிமிடங்களுக்கு க‌ண்களை‌ச் சு‌ற்‌றி வைக்கவும். கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் மறையும்.

வெந்தயத்தை விழுதாக அரைத்து தலையில் தடவி ஊற‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் எலு‌மி‌‌ச்சை சாறு கல‌ந்த நீரில் குளிக்கவும். இது கு‌ளி‌ர்‌ச்‌சியை ஏ‌ற்படு‌‌த்து‌ம். எனவே பா‌ர்‌த்து செ‌ய்யவு‌ம்.

தேங்காய் எண்ணையை தடவி சீகைக்காய் தூள் உபயோகப்படுத்தி தலை குளிக்கவும்.

செம்பருத்தி பூக்களை பசைபோல அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை தலையில் தடவி பின்னர் அலசவும்.

புதினா இலைகளை அரைத்து சாறெடுத்து முகத்தில் தடவிவர உலர்ந்த தன்மை நீங்கும், முகப்பருக்களுக்கும் நிவாரணம் கிடைக்கும்.

சிறிதளவு ஆரஞ்சுப் பழச்சாறு எடுத்து முகத்திலும் கழுத்திலும் தடவி 5-10 நிமிடங்கள் கழித்து கழுவ உடனடி பளபளப்பு கிடைக்கும்.

துவரம் பருப்பு, மருதாணி இலை ஆகியவற்றை தயிரில் ஊறவைத்து அரைத்து பாதத்தில் பூசினா‌ல் பித்த வெடிப்பு குறையும்.

மு‌ல்தா‌னிமெ‌ட்டியை த‌ண்‌ணீ‌ரி‌ல் குழை‌த்து முக‌த்‌‌தி‌ல் தட‌வி வர முக‌ம் மல‌ர்‌ச்‌சியடையு‌‌ம்.

இயற்கையிலேயே ஒருவர் அழகாக இருக்க தயிரைத் தவிர சிறந்த மருந்து வேறெதுவும் இல்லை.

குளிக்கும்போது கருப்பான இடங்களில் மட்டும் பீர்க்கங்காய் கூட்டினை வைத்து சோப்பு போட்டு தேய்த்து குளிக்கலாம்.

மருதாணி இலைகளை விழுதாக அரைத்து தலையில் தடவி மயிர்க்கால்களில் நன்கு ஊடுருவும்படி தேய்த்துக் கொடுக்கவும்.
Title: Re: இய‌ற்கை ‌முறை‌யிலான அழகு‌க் கு‌றி‌ப்புக‌ள்!
Post by: Global Angel on December 18, 2011, 10:15:25 PM

இயற்கையான வகையில பாதுகாத்தா எப்பவும் அழகு நிலையா இருக்கும் .... நல்ல தகவல் சுருதி
 
Title: Re: இய‌ற்கை ‌முறை‌யிலான அழகு‌க் கு‌றி‌ப்புக‌ள்!
Post by: RemO on December 19, 2011, 02:40:45 AM
naturalla ivlo kidaichalum ponuga parlor poi selavu panuratha vidamatangaley
Title: Re: இய‌ற்கை ‌முறை‌யிலான அழகு‌க் கு‌றி‌ப்புக‌ள்!
Post by: Global Angel on December 20, 2011, 03:34:35 PM
இயற்கையான முறைல மேற்கொள்ள நிறைய நேரம் எடுக்கும் ... அவசர கால உலகம் .. அதுக்கேத்த போல அவாரமா முடிசுக்கதான் போறாங்க  
Title: Re: இய‌ற்கை ‌முறை‌யிலான அழகு‌க் கு‌றி‌ப்புக‌ள்!
Post by: RemO on December 20, 2011, 09:03:15 PM
Athukunu thevai ilama selavum athikam athum ilama aabaththum athikamla