FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: MysteRy on January 02, 2015, 11:58:18 AM

Title: ~ நீங்கள் அனுப்பிய (E-Mail) ஈமெயில்லை திரும்ப பெறுவது எப்படி? ~
Post by: MysteRy on January 02, 2015, 11:58:18 AM
நீங்கள் அனுப்பிய (E-Mail) ஈமெயில்லை திரும்ப பெறுவது எப்படி?

நீங்கள் தவறாக sent பண்ணிய ஈமெயில்யை unsent பண்ண முடியும், நீங்கள் தவறாகவோ அல்லது மாற்றியோ ஒரு மெயில்யை அனுப்பி விட்டால் அந்த மெயிலை திரும்ப பெற முடியும். முதலில் உங்கள் மின்னஞ்சல் கணக்கிற்குள் நுழைந்து கொள்ளுங்கள். இப்போது Settings என்பதன் மீது கிளிக் செய்யுங்கள். இப்போது Laps – இல் click செய்யுங்கள் இப்போது “Undo Send” என்ற பகுதிக்கு வரவும். அதில் Undo வசதியை Enable செய்யவும் பின்னர் Save Changes என்ற பட்டனை அழுத்துங்கள்.

இப்போது நீங்கள் ஒருவருக்கு ஈமெயில் அனுப்பிய பிறகு பின்வரும் image தோன்றும் அதில் நீங்கள் Undo என்ற optionயை தேர்வு செய்யவும். இந்த image சில நொடிகள் மட்டும் display ஆகும். இந்த image தோன்றும் நேரத்தை 30 வினாடிகள் வரை அதிகப்படுத்த Settings என்பதன் மீது கிளிக் செய்து General என்ற option யை தேர்வு செய்து அதில் Enable Undo Sentல் 30 வினாடிகள் வரை set செய்து Save Changesயை click செய்யவும்.

இப்போது நீங்கள் ஒருவருக்கு ஈமெயில் அனுப்பிய பிறகு Your message has been sent. Undo View Message என்ற image தோன்றும் அதில் நீங்கள் Undo என்ற optionயை தேர்வு செய்வதன் மூலம் அந்த mail-யை திரும்ப பெறலாம்.