FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ராம் on December 30, 2014, 06:46:53 AM
-
பலமுறை சிந்தித்தேன்
ஏன் இந்த மண்ணில்
பிறந்தேன் என்று
வலிகளுடன்....
நி என்னை வெறுத்து
பேசிய போதெல்லாம்
நி என்னை காயபடுத்தினாலும்
உன்மீது சிறிதளவும் கோபம்
வரவில்லை காரணம்
உன்மீது நான் கொண்ட
ஆழமான காதல்...
ஆனாலும் வருத்தங்கள் உண்டு
நீயே என்னை வெறுத்தால்
எங்கு செல்வேன் நான்?....
நி என்னை என்னதான்
காயபடுத்தினாலும்
உன்னை கண்ட
ஒரு நொடியில்
சிந்திப்பேன்
நீ அன்பாக பேசும்
அந்த நிமிடம் நினைப்பேன்
நி என்மீது கொண்ட
காதலுக்காக
பலமுறை பிறக்க
வேண்டுமென்று
உனக்காகவே
வாழ்ந்து கொனடிருகும்
ஒரு சிறகில்லா பறவையாக நான்!!!...