FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on December 25, 2014, 06:17:26 PM
-
உன் சிவந்து போன
சிமிழ் இதழ்களோ அழகு
அது பரிமாறும் சிரிப்புகளோ
அந்த இதழுக்கு நீ சூடும்
பூச்சரம்
நானோ உன் பார்வை ஆபரணங்களை
எடுத்தனிந்து மகிழ்கிறேன்
உன் சிரிப்புப் பூச்சரத்தில்
சிறகடிக்கும் வண்டாகி
தேன் உண்ணத் துடிக்கிறேன்
ஒரு கவிதை புத்தகத்தை விடவும்
சுவையாக நான்
வாசிக்கும் ஒரே புத்தகம்
உன் எழில் மிகு வதனம் தான்
உன் விழிகளை நேசிக்கிறேன்
ஏனெனில்
விளக்குகள் அவை
என் மனக்குடிலில்
உன் சிரிப்பை நேசிக்கிறேன்
ஏனெனில்
கவிதைகள் அவை
என் மனப் புத்தகத்தில்
உன்னையே நேசிக்கிறேன் நான்
ஏனெனில்
உன் இதயத்தையே எனக்கு
பரிசாக அளித்ததால்
உன் விழிகளின் பார்வைகளை
விளங்க்கிக் கொண்டதனால்
என் இதய வீணை
புதிய புதிய ராகங்களை
மீட்டுகின்றன
உன் விழிகளின்
வெளிச்ச வரம் பெற்ற பின்பே
என் மனத் தேவாலயத்தில்
கவிதை
மெழுகுவர்த்திகளாக சுடர்விடுகின்றன