FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on December 24, 2014, 10:21:29 PM
-
உங்கள் நினைவு திறனை பாதுகாப்பது எப்படி ?…
டிமென்ஷியா மற்றும் அல்சைமர் போன்ற மறதி நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்க தினமும் அமைதியான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி போன்ற இந்த இரண்டு வழிகளில் உங்கள் மூளையை பாதுகாப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது இன்னொரு புதிய வழியும் சேர்ந்துள்ளது, மூளையின் முதுமை தன்மையை குறைப்பதற்கு, அதுதான் மென்மையான யோகா.
மூத்தோர் பற்றிய பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், 55 பேரில் இரண்டு குழுக்களாக சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என பிரிக்கப்பட்டு பழைய முறையான , திட்டமிடல், சிக்கல் தீர்க்கும் முறை, மற்றும் ஒரே நேரத்தில் பல பணி செய்வது போன்ற அறிவாற்றல் சார்ந்த திறன்கள் சோதிக்கப்பட்டன. ஒரு குழு 60 நிமிடங்கள் மென்மையான யோகாவை தினமும் 3 முறை, ஒரு வாரம் செய்தது, அடுத்த குழு அதே அளவு, உடற்பயிற்சி, பளு தூக்குதல், போன்ற வேலைகளை செய்தது. 8 வாரங்களுக்கு பிறகு, பங்கேற்பாளர்களின் அறிவாற்றல் திறன்கள் மீண்டும் சோதனை செய்யப்பட்டது. அதிக மாற்றங்களை காட்டியது யோகா குழுவே, இவர்களின் அறிவாற்றல் செயல்திறன் கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மற்றொரு குழுவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
யோகா எப்படி நம் மூளையை விழித்தெழ செய்கிறது?
ஆய்வு ஆசிரியர் மற்றும் வேய்ன் ஸ்டேட் யுனிவர்சிட்டி நேஹா கோதே, இளநிலை பேராசிரியர் உதவியாளர் சொல்வது , யோகாவானது மன திறன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று உறுதியாக சொல்லவில்லை, ஆனால் அவர் யோகவினால் மனம், உடல் உறுப்பு அனைத்தையும் ஒன்றுபடுத்துகிறது என்று நம்புகிறார்.
“யோகா பயிற்சி போது, உங்கள் உடல் மட்டும் நகர்வதில்லை” அவர் கூறுவதாவது, “உங்கள் மூச்சு காற்றை உணர்வதோடு, உங்கள் மனநிலை ஒருமுகப்படுத்தி அறியலாம்.” என்று அவர் கூறுகிறார், நீங்கள் மற்ற உடற்பயிற்சிகளான நடப்பது, ஓடுவது, போன்ற உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்றால், அது மிகவும் எளிதாக இருக்கிறது சுற்றி என்னவெல்லாம் நடக்கிறதுஎன்று சொல்ல முடியும், ஆனால் யோகா செய்யும் போது இந்த தொந்தரவு ஏதும் இன்றி மனதை ஒருமுகப்படுத்தி அமைதியாக செய்ய முடியும், ஒரு பாய் போதும் இதை செய்ய.
சிறப்பு, கடந்து போன ஆராய்ச்சியின் படி, மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறைவதோடு, புலனுணர்வு செயல்பாடு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், அதனால் யோகா செய்வதினால் மனமும் உடலும் தெளிவடையும்.
தினமும் 10 நிமிடம் யோகா செய்வதால் அறிவாற்றல் ஏற்றம் போன்ற நன்மைகள் ஏற்படுகிறது.