FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on December 24, 2014, 02:16:22 PM
-
பால் பவுடரை தொடர்ந்து சாப்பிடுவதால் பிரச்னை ஏற்படுமா?
பால் பவுடரை தொடர்ந்து குழந்தைகள் சாப்பிடு வது ஆபத்து. பால் பற்கள் இருக்கும் குழந்தையாக இருந்தால், பால்பவுடர் பற்களின் இடையில் தங்கி சொத்தையை உருவாக்கும்.
பற்களுக்கு இடையே இடைவெளி விழுந்து, பற்சிதைவு உண்டாகி அசிங்கமாக தோற்றம் தரும். அஜீரணக் கோளாறுகள் உருவாகும்.
குழந்தை எடுத்துக் கொள்ளும் உணவின் அளவு குறைந்து ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படலாம். தினமும் ஒரு கப் பால் என்பது உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்துக்குப் போதுமானது.
கூடுதலாக பால் பவுடர் சாப்பிடுவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து மறக்கடிக்க முயற்சி செய்யுங்கள்.